Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.4 Thirumalai Murugan Pallu Book Back Solution

இயல் 2.4 – திருமலை முருகன் பள்ளு

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 11th Tamil Chapter 2.4 ‘Thirumalai Murugan Pallu’, you’ll find solutions to all the questions from the 11th Standard Tamil Book Lesson 2.4 திருமலை முருகன் பள்ளு

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 11th Tamil Chapter 2.4 Thirumalai Murugan Pallu Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 11th Tamil Guide PDF.

திருமலை முருகன் பள்ளு வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Thirumalai Murugan Pallu’ which is the first subject of class 11 Tamil. Additionally, you can also access additional questions related to the Subject.

Previous Lesson: காவியம்

நூல் வெளி

 • திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்திற்கு அருகில் உள்ளது பண்புளிப்பட்டிணம்.
 • இங்குள்ள சிறுகுன்றின் பெயர் திருமலை.
 • குன்றின் மேலுள்ள முருகக்கடவுளை பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு திருமலைமுருகன் பள்ளு பாடப்பட்டுள்ளது.
 • இந்நூலில் கலித்துறை, கலிப்பா, சிந்து ஆகிய பா வகைகள் விரவி வந்துள்ளன.
 • இந்நூல் “பள்ளிசை” என்றும் “திருமலை அதிபர் பள்ளு” எனவும் வழங்கப்படுகிறது.
 • திருமலை முருகன் பள்ளு நூலின் ஆசிரியர் பெரியவன் கவிராயன்.
 • இவர் காலம் 18-ம் நூற்றாண்டு.

சொல்லும் பொருளும்

 • வட ஆரிநாடு – திருமலை
 • தென் ஆரிநாடு – குற்றாலம்
 • ஆரளி – மொய்க்கின்ற வண்டு
 • இந்துளம் – இந்தளம் எனும் ஒரு வகைப் பண்
 • இடங்கணி – சங்கிலி
 • உளம் – உள்ளான் என்ற பறவை
 • சலச வாவி – தாமரைத் தடாகம்
 • தரளம் – முத்து
 • கா – சோலை
 • முகில்தொகை – மேகக்கூட்டம்
 • மஞ்ஞை – மயில்
 • கொண்டல் – கார்கால மேகம்
 • மண்டலம் – உலகம்
 • வாவித் தரங்கம் – குளத்தில் எழும் அலை
 • அளி உலாம் – வண்டு மொய்க்கின்ற

இலக்கணக் குறிப்பு

 • செங்கயல், வெண்சங்கு – பண்புத்தொகைகள்
 • அகிற்புகை – ஆறாம் வேற்றுமைத்தொகை
 • மஞ்ஞையும் கொண்டலும் – எண்ணும்மை
 • கொன்றைசூடு – இரண்டாம் வேற்றுமைத்தொகை

பகுபத உறுப்பிலக்கணம்

ஈன்ற =  ஈன் + ற் + அ

 • ஈன் – பகுதி
 • ற் – இறந்தகால இடைநிலை
 • அ –  பெயரெச்ச விகுதி

புணர்ச்சி விதிகள்

செங்கயல் = செம்மை + கயல்

 • “ஈறுபோதல்” என்ற விதிப்படி செம் + கயல் என்றாயிற்று
 • “முன்னின்ற மெய் திரிதல்” என்ற விதிப்படி செங்கயல் என்றாயிற்று

குறு வினா

வளருங் காவில் முகில்தொகை ஏறும் – பொன்
பாடம் எங்கும் அகிற்புகை நாறும் – அடிக்கோடிட்ட தொடர் குறிப்பிடுவது என்ன?

 • தென்கரை நாட்டின் நீண்டு வளர்ந்த சோலையில் மேகக் கூட்டங்கள் தங்கிச் செல்லும்.
 • நிலவளம், நீர்வளம் மிக்க நாடு தெனகரை நாடு எனக் குறிப்பிடுகின்றார் பெரியவன் கவிராயர்.

சிறு வினா

சலச வாவியில் செங்கயல் பாயும் இடம் சுட்டி பொருள் விளக்குக

இடம்:-

திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்திற்கு அருகில் உள்ளது பண்புளிப்பட்டிணம். இங்குள்ள சிறுகுன்றின் பெயர் திருமலை. பாட்டுடைத்தலைவன் முருகப்பெருமான். வடகரை நாட்டின் சிறப்பை பற்றி பாடுகையில் “சலசவாவியில் செங்கயில்பாயும்” என்கிறார் கவிராயர்.

பொருள்:-

தாமரைத் தடாகத்தில் மீன்கள் துள்ளிப் பாய்ந்து விளையாடும்.

விளக்கம்:-

 • வடகரை நாட்டின் சிறப்பைப் பற்றி பாடும் கவிராயர் அங்குள்ள நீர்வளம் பற்றியும், நிலவளம் பற்றியும் தம் பாடலில் மிக அழகாகப் படம் பிடித்து காட்டுகிறார்.
 • மலரில் மொய்க்கும் வண்டுகள் ரீங்காரம் இடுமாம்.
 • வண்டின் இசைக்கேட்டு உள்ளான் பறவை தன் வாலை ஆட்டுமாம்.
 • தாமரைக் குளத்தில் மீன்கள் துள்ளிப் பாய்ந்த விளையாடுமாம்.
 • வெண்சங்குகள் பரவிக் காணப்படுமாம்.
 • முக்காலம் உணர்ந்த முனிவர் வார்த்தைகள் மெய்யாகுமாம். அழகான வர்ணனையுடன் குறிப்பிடுகிறார்.

நெடு வினா

திருமலை முருகன் பள்ளு கூறும் வடகரை, தென்கரை நாட்டுப்பாடல்கள் வழி இயற்கை வளங்களை விவரிக்க

பள்ளு:-

96 வகை சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று இது “உழத்திப்பாட்டு எனவும் அழைக்கப்படும் தொல்காப்பியம் குறிப்பிடும புலன் என்னம் இலக்கிய வகையைச் சாரும்.

வடகரை நாட்டின் இயற்கை வளம்:-

 • வடகரை நாட்டில் மலரில் மொய்க்கும் வண்டுகள் இந்தளம் என்ற பண்ணை ரீங்காரமிட்டுபாடும். வண்டின் இசைக்கேட்டு வாய்க்காலின் மதகுகளிடையே கட்டப்பட்ட சங்கிலியில் மீனைப் பிடித்து உண்பதற்காக வந்த உள்ளான் பறவை வாலை ஆட்டிக் கொண்டு அமர்ந்திருக்கும்.
 • தாமரை தடாகத்தில் மீன்கள் துள்ளிப் பாய்ந்து விளையாடும். முத்துகளை ஈன்ற வெண்மையான சங்குகள் பரவிக் காணப்படும்.
 • மின்னலையொத்த பெண்கள் பெய் என்றால் மழை பெய்யும். உள்ளங்கை ஏந்தி இரந்து உண்ணும் இயல்புடைய முனிவர்கள் கூறும் வார்த்தைகள் மெய்யாகும்.
 • இத்தன்மை கொண்ட திருமலையில் புலவர்கள் போற்றகின்ற திருமலைச் சேவகன் வீற்றிருக்கின்றார்.

தென்கரை நாட்டின் இயற்கை வளம்:-

 • தென்கரை நாட்டின் நீண்டு வளர்ந்த சோலையில் மேகக்கூட்டங்கள் தங்கிச் செல்லும். இந்நாட்டில் உள்ள பொன்னாலான மாளிகைகளில் அகில் புகையின் நறுமணம் பரவிக் கொண்டே இருக்கும். இம்மாளிகைகளை மயில்களும் கார்கால மேகங்களும் சூழ்ந்த காக்கும்.
 • செங்கோலைக் கொண்ட மன்னர் தென்கரை நாட்டை நீதி தவறாத காவல் காப்பர். இளைய பொன்னாலான அரங்கில் நடித்து விளையாடி மகிா்ந்திருப்பர்.
 • இங்குள்ள குளங்களின் அலைகள் முத்துகளை ஏந்தி வரும். அவ்வலைகள் கரைகளில் மோதும்பொழுது முத்துக்கள் சிதறி வெடிக்கும்.
 • இத்தன்மை கொண்ட குற்றாலத்தில் வண்டுகள் மொய்க்கும் கொன்றை மலரைச் சூடிய தென்னாடுடைய சிவபெருமானாகிய குற்றாலநாதன் வீற்றிருக்கின்றார்.

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “காவியம்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1. நெல்லு வகையை எண்ணினாலும் __________ வகையை எண்ண முடியாது.

 1. புல்ல
 2. புள்ளு
 3. பள்ளு
 4. கல்லு

விடை: பள்ளு

2. வேளாண்மை இலக்கியம் என்றழைக்கப்படுவது

 1. புல்ல
 2. புள்ளு
 3. பள்ளு
 4. கல்லு

விடை: பள்ளு

3. தரளம் என்னும் சொல்லின் பொருள்

 1. மாணிக்கம்
 2. வைடூரியம்
 3. பவளம்
 4. முத்து

விடை : முத்து

4. பள்ளு என்ற இலக்கிய வடிவத்தின் வேறு பெயர்

 1. உழத்திப்பாட்டு
 2. கவிப்பாட்டு
 3. வயல்பாட்டு
 4. இயற்கைபாட்டு

விடை : பள்ளு

5. திருமலை முருகன் பள்ளு நூலின் ஆசிரியர்

 1. பெரியவன் கவிராயர்
 2. பாரதியார்
 3. உடுமலை நாராயணகவி
 4. அழகிய பெரியவன்

விடை : அழகிய பெரியவன்

6. மின்னலையொத்த __________ பெய் என்றால் மழை பெய்யும்

 1. பெண்கள்
 2. ஆண்கள்
 3. துறவிகள்
 4. தேவர்கள்

விடை : பெண்கள்

7. மின்னலையொத்த __________ பெய் என்றால் மழை பெய்யும்

 1. பெண்கள்
 2. ஆண்கள்
 3. துறவிகள்
 4. தேவர்கள்

விடை : பெண்கள்

8. திருமலை முருகன் பள்ளுக்கு வழங்கப்படும் பெயர்கள் 

 1. முக்கூடற்பள்ளு, பள்ளிசை
 2. பள்ளிசை குறவஞ்சி
 3. திருமலை அதிபர் பள்ளு குறத்திப்பாட்டு
 4. திருமலை முருகன் பள்ளு, பள்ளிசை

விடை : திருமலை முருகன் பள்ளு, பள்ளிசை

9. வட ஆரிய நாடு என வழங்கப் பெறுவது

 1. பண்பொழில்
 2. குற்றாலம்
 3. பேரணாம்பட்டு
 4. திருமலை

விடை : திருமலை

10. தென் ஆரிய நாடு என வழங்கப் பெறுவது

 1. பண்பொழில்
 2. குற்றாலம்
 3. பேரணாம்பட்டு
 4. திருமலை

விடை : குற்றாலம்

11. குற்றாலநாதன் சூடிய மலர்

 1. கொன்றை
 2. தாமரை
 3. காயா
 4. அல்லி

விடை : கொன்றை

12. வெண்சங்கு என்னும் சொல்லின் இலக்கணக்குறிப்பு

 1. வினைத்தொகை
 2. பண்புத்தொகை
 3. இருபெயரொட்டு பண்புத்தொகை
 4. வினையெச்சம்

விடை : பண்புத்தொகை

13 திருமலைக்குன்றின் மேலுள்ளவர்

 1. அருகன்
 2. முருகன்
 3. திருமால்
 4. சிவன்

விடை : முருகன்

13 திருமலைப்பள்ளு நூலின் ஆசிரியர்

 1. அழகிய பெரியவன்
 2. பெத்லகேம் குறவஞ்சி
 3. திருக்குற்றாலக் குறவஞ்சி
 4. பெரியவன் கவிராயர்

விடை : பெரியவன் கவிராயர்

14. பெரியவன் கவிராயரின் காலம் ____________ நூற்றாண்டு

 1. 16
 2. 17
 3. 18
 4. 19

விடை : 18

குறுவினா

1. பள்ளு – குறிப்பு வரைக

 • 96 வகை சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று.
 • இது “உழத்திப்பாட்டு எனவும் அழைக்கப்படும்
 • கலிப்பா, கலித்துறை, சிந்து ஆகிய பா வகைளால் பாடப்படுகிறது
 • உழவர், உழத்தியர் வாழ்வில் நிகழும் நிகழ்ச்சிகளை எளிய நடையில் நயம்படிக் கூறுகிறது.

2. திருமலை முருகன் பள்ளு கூறும் நெல் வகைகள் யாவை?

பைங்குழலாள்
சீதாபோகம்
ரங்கஞ்சம்பா
மணல்வாரி
அதிக்கிராதி
அரிக்ராவி
முத்துவெள்ளை
புழுகு சம்பா
சொரி குரம்பை
புத்தன்வாரி
சிறைமீட்டான்
கருங்சூரை
பூம்பாளை
குற்றாலன்
பாற்கடுக்கன்
கற்பூரப்பாளை
காடை கழுத்தன்
மிளகு சம்பா
பனைமுகத்தன்

3. திருமலை முருகன் பள்ளு கூறும் நெல் வகைகள் யாவை?

காரி, கொந்திக்காளை, மால்காளை, மறைகாளை, மயிலைக்காளை, மேழைக்காளை, செம்மறையான், கருமறையான்

4. திருமலை முருகன் கூறும் உழவுக்கருவிகள் யாவை?

கலப்பை, நுகம், பூட்டு, வள்ளைக்கை, உழக்கோல், கொழு, கயமரம், மண்வெட்டி, வடம்

 

Leave a Comment