[Term-2] Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.1 Kalangarai Vilakkam Book Back Solution

இயல் ஒன்று – கலங்கரை விளக்கம்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 7th Tamil Chapter 1.1 ‘Kalangarai Vilakkam’ Here, you’ll find solutions to all the questions from the 7th Standard Tamil Book Term 2 Lesson 1.1 கலங்கரை விளக்கம்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 7th Tamil Chapter 1.1 Kalangarai Vilakkam Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 7th Tamil Guide PDF.

கலங்கரை விளக்கம் பாடல் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Kalangarai Vilakkam’ which is the first subject of class 7 Tamil. Additionally, you can also access additional questions related to the Kalangarai Vilakkam subject.

Next Lesson: வழக்கு

கலங்கரை விளக்கம் பாடல்

வானம் ஊன்றிய மதலை போல
ஏணி சாத்திய ஏற்றருஞ் சென்னி
விண்பொர நிவந்த வேயா மாடத்து
இரவில் மாட்டிய இலங்குசுடர் ஞெகிழி
உரவுநீர் அழுவத்து ஓடுகலம் கரையும்
துறை…….

– கடியலூர் உருத்திரங் கண்ணனார்

பாடலின் பொருள்

கலங்கரை விளக்கமானது வானம் கீழே விழுந்துவிடாமல் தாங்கிக் கொண்டிருக்கும் தூண் போலத் தோற்றமளிக்கிறது; ஏணி கொண்டு ஏறமுடியாத உயரத்தைக் கொண்டிருக்கிறது; வேயப்படாமல் சாந்து பூசப்பட்ட விண்ணை முட்டும் மாடத்தை உடையது. அம்மாடத்தில் இரவில் ஏற்றப்பட்ட எரியும் விளக்கு, கடலில் துறைமுகம் அறியாமல் கலங்கும் மரக்கலங்களைத் தன் துறைமுகம் நோக்கி அழைக்கிறது.

நூல் வெளி

  • கடியலூர் உருத்திரங்கண்ணனார் சங்ககாலப் புலவர்.
  • இவர் கடியலூர் என்ற ஊரில் வாழ்ந்தவர்.
  • இவர் பத்துப்பாட்டில் உள்ள பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.
  • பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத்தலைவன் தொண்டைமான் இளந்திரையன்.
  • இந்நூலின் 346 முதல் 351 வரை உள்ள அடிகள் நமக்குப் பாடப்பகுதியாகத் தரப்பட்டுள்ளன.
  • வள்ளல் ஒருவரிடம் பரிசு பெற்றுத் திரும்பும் புலவர், பாணர் போன்றோர் அந்த வள்ளலிடம் சென்று பரிசு பெற, பிறருக்கு வழிகாட்டுவதாகப் பாடப்படுவது ஆற்றுப்படை இலக்கியம் ஆகும்.

தெரிந்து கொள்வோம்

பத்துப்பாட்டு நூல்கள்

  • திருமுருகாற்றுப்படை
  • பெருநாராற்றுப்படை
  • பெரும்பாணாற்றுப்படை
  • சிறுபாணாற்றுப்படை
  • முல்லைப்பாட்டு
  • மதுரைக்காஞ்சி
  • நெடுநெல்வாடை
  • குறிஞ்சிப்பாட்டு
  • பட்டினப்பாலை
  • மலைபடுகடாம்

சொல்லும் பொருளும்

  • மதலை – தூண்
  • சென்னி – உச்சி
  • ஞெகிழி – தீச்சுடர்
  • உரவுநீர் – பெருநீர்பரப்பு
  • அழுவம் – கடல்
  • கரையும் – அழைக்கும்
  • வேயா மாடம் – வைக்கோல் போன்றவற்றால் வேயப்படாது, திண்மையாகச் சாந்து பூசப்பட்ட மாடம்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. வேயாமாடம் எனப்படுவது ____________

  1. வைக்கோலால் வேயப்படுவது
  2. சாந்தினால் பூசப்படுவது
  3. இலையால் வேயப்படுவது
  4. துணியால் மூடப்படுவது

விடை : சாந்தினால் பூசப்படுவது

2. உரவுநீர் அழுவம் இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்

  1. காற்று
  2. வானம்
  3. கடல்
  4. மலை

விடை : கடல்

3. கடலில் துறை அறியாமல் கலங்குவன ______.

  1. மீன்கள்
  2. மரக்கலங்கள்
  3. தூண்கள்
  4. மாடங்கள்

விடை : மரக்கலங்கள்

4. தூண் என்னும் பொருள் தரும் சொல் ______.

  1. ஞெகிழி
  2. சென்னி
  3. ஏணி
  4. மதலை

விடை : மதலை

குறுவினா

1. மரக்கலங்களைத் துறை நோக்கி அழைப்பது எது?

மரக்கலங்களைத் துறை நோக்கி அழைப்பது – கலங்கரை விளக்கின் ஒளி

2. கலங்கரை விளக்கில் எந்நேரத்தில் விளக்கு ஏற்றப்படும்?

கலங்கரை விளக்கில் இரவு நேரத்தில் விளக்கு ஏற்றப்படும்

சிறுவினா

கலங்கரை விளக்கம் பற்றிப் பெரும்பாணாற்றுப்படை கூறும் கருத்துகளை எழுதுக.

  • கலங்கரை விளக்கமானது வானம் கீழே விழாமல் தாங்கிக்கொண்டு இருக்கும் தூண்போலத் தோற்றம் அளிக்கும்.
  • அது ஏணி கொண்டு ஏற முடியாத அளவுக்கு உயரத்தை கொண்டு இருக்கின்றது.
  • வைக்கோல் ஆகியவற்றால் வேயப்படாமல் வலிமையான சாந்து (சுண்ணாம்பு) பூசப்பட்ட வானத்தை முட்டும் மாடத்தை உடையது.
  • அம்மாடத்தில் இரவில் ஏற்றப்பட்ட எரியும் விளக்கு, கடலில் துறை (எல்லை) அறியாமல் கலங்கும் மரங்கலங்களைத் தன் துறை (எல்லை) நோக்கி அழைப்பது.

சிந்தனை வினா

கலங்கரை விளக்கம் கப்பல் ஓட்டிகளைத் தவிர வேறு யாருக்கெல்லாம் பயன்படும் என நீங்கள் கருதுகிறீர்கள்?

  • கடல் ஆய்வு செய்பவர்கள்
  • மீனவர்கள்
  • கப்பற்படை வீரர்கள்
  • கடலில் மூழ்கி முத்தெடுப்பவர்கள்

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “கலங்கரை விளக்கம்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத்தலைவன் ____________

  1. தொண்டைமான் இளந்திரையன்
  2. கடியலூர் உருத்திரங்கண்ணார்
  3. முடதாமக்கண்ணியார்
  4. நக்கீரர்

விடை : தொண்டைமான் இளந்திரையன்

2. கடியலூர் உருத்திரங்கண்ணார் எழுதிய நூல்கள்

  1. பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை
  2. பெரும்பாணாற்றுப்படை, பதிற்றுப்பத்து
  3. பதிற்றுப்பத்து, பட்டினப்பாலை
  4. பதிற்றுப்பத்து,மலைப்படுகடாம்

விடை : பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை

3. கடலில் துறை அறியாமல் கலங்குவது ……………

  1. கடற்கரை
  2. மாடம்
  3. மரக்கலங்கள்
  4. கப்பல்

விடை : மரக்கலங்கள்

4. ஞெகிழி என்பதன் பொருள்

  1. தூண்
  2. தீச்சுடர்
  3. கடல்
  4. உச்சி

விடை : தீச்சுடர்

5. வானம் ஊன்றிய மதலை போன்றது ……………

  1. கடற்கரை
  2. கலங்கரை விளக்கம்
  3. மாடம்
  4. கப்பல்

விடை : கலங்கரை விளக்கம்

6. சென்னி என்பதன் பொருள்

  1. தூண்
  2. கடல்
  3. தீச்சுடர்
  4. உச்சி

விடை : உச்சி

7. மரம் + கலங்கள் என்பதனை சேர்த்து எழுதக்கிடைப்பது

  1. மரம் கலங்கள்
  2. மரக்கலங்கள்
  3. மரக்களங்கள்
  4. மரக்கழங்கள்

விடை : மரக்கலங்கள்

7. அ + மாடம் என்பதனை சேர்த்து எழுதக்கிடைப்பது

  1. அவ்மாடம்
  2. அம்மாடம்
  3. அமாடம்
  4. அந்த மாடம்

விடை : மரக்கலங்கள்

8. தீச்சுடர் என்பதனை சேர்த்து எழுதக்கிடைப்பது

  1. தீச் + உடர்
  2. தீச் + சுடர்
  3. தீ + சுடர்
  4. தீ + சூடர்

விடை : தீ + சுடர்

குறு வினா

1. கடியலூர் உருத்திரங்கண்ணனார் சிறு குறிப்பு வரைக

  • சங்காலப்புலவர்.
  • கடியலூரில் வாழ்ந்தவர்.
  • பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.

2. பெரும்பாணாற்றுப்படை சிறு குறிப்பு வரைக

  • பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று
  • இயற்றியவர் – கடியலூர் உருத்திரங்கண்ணார்
  • ஆற்றுப்படை இலக்கிய வகையைச் சார்ந்தது.
  • பாட்டுடைத் தலைவன் – தொண்டைமான் இளந்திரையன்

3. ஆற்றுப்படை இலக்கியம் என்றால் என்ன?

வள்ளல் ஒருவரிடம் பரிசு பெற்றுத் திரும்பும் புலவர், பாணர் போன்றோர் அந்த வள்ளலிடம் சென்று பரிசு பெற, பிறருக்கு வழிகாட்டுவதாகப் பாடப்படுவது ஆற்றுப்படை இலக்கியம் ஆகும்

Leave a Comment