Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.5 Echam Book Back Solution

இயல் 3.5 – எச்சம்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 8th Tamil Chapter 3.5 ‘Echam’, you’ll find solutions to all the questions from the 8th Standard Tamil Book Lesson 3.5 எச்சம்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 8th Tamil Chapter 3.5 Echam Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 8th Tamil Guide PDF.

எச்சம் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Echam’ which is the first subject of class 8 Tamil. Additionally, you can also access additional questions related to the Echam subject.

Previous Lesson: தலைக்குள் ஓர் உலகம்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் ____________ எனப்படும்.

  1. முற்று
  2. எச்சம்
  3. முற்றெச்சம்
  4. வினையெச்சம்

விடை : எச்சம்

2. கீழ்க்காணும் சொற்களில் பெயரெச்சம் ____________

  1. படித்து
  2. எழுதி
  3. வந்து
  4. பார்த்த

விடை : பார்த்த

3. குறிப்பு வினையெச்சம் ____________ வெளிப்படையாகக் காட்டாது.

  1. காலத்தை
  2. வினையை
  3. பண்பினை
  4. பெயரை

விடை : காலத்தை

பொருத்துக

  1. நடந்து –  முற்றெச்சம்
  2. பேசிய –  குறிப்புப் பெயரெச்சம்
  3. எடுத்தனன். உண்டான் –  பெயரெச்சம்
  4. பெரிய –  வினையெச்சம்

விடை : 1 – ஈ, 2 – இ, 3 – அ, 4 – ஆ

கீழ்க்காணும் சொற்களைப் பெயரெச்சம், வினையெச்சம் என வகைப்படுத்துக.

நல்ல, படுத்து, பாய்ந்து, எறிந்த, கடந்து, வீழ்ந்த, மாட்டிய, பிடித்து, அழைத்த, பார்த்து

பெயரெச்சம்

  • நல்ல
  • எறிந்த
  • வீழ்ந்த
  • மாட்டிய
  • அழைத்த

வினையெச்சம்

  • படுத்து
  • பாய்ந்து
  • கடந்து
  • பிடித்து
  • பார்த்து

சிறு வினா

1. எச்சம் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?

பொருள் முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் எச்சம் எனப்படும்.

இது பெயரெச்சம், வினையெச்சம் என்று இருவகைப்படும்

2. அழகிய மரம் எச்ச வகையை விளக்குக.

  • ‘அழகிய மரம்’ – இத்தொடரில் உள்ள சிறிய என்னும் சொல்லின் செயலையோ காலத்தையோ அறிய முடியவில்லை. பண்பினை மட்டும் குறிப்பாக அறிய முடிகிறது.
  • இவ்வாறு செயலையோ காலத்தையோ தெளிவாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாகக் காட்டும் பெயரெச்சம் குறிப்புப் பெயரெச்சம் எனப்படும்.

3. முற்றெச்சத்தைச் சான்றுடன் விளக்குக.

சான்று : வள்ளி படித்தனள் மகிழ்ந்தாள்.

இத்தொடரில் படித்தனள் என்னும் சொல் படித்து என்னும் வினையெச்சப் பொருளைத் தருகிறது.

இவ்வாறு ஒரு வினைமுற்று எச்சப்பொருள் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது முற்றெச்சம் எனப்படும்.

4. வினையெச்சத்தின் வகைகளை விளக்குக

வினையெச்சங்கள் தெரிநிலை வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் என இருவகைப்படும்

தெரிநிலை வினையெச்சம் 

எழுதி வந்தான்

இத்தொடரில் உள்ள எழுதி என்னும் சொல் எழுதுதல் என்னும் செயலையும் இறந்த காலத்தையும் தெளிவாகக் காட்டுகிறது.

இவ்வாறு செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம் எனப்படும்.

குறிப்பு வினையெச்சம்

மெல்ல வந்தான்

இத்தொடரில் உள்ள மெல்ல என்னும் சொல் காலத்தை வெளிப்படையாகக் காட்டவில்லை. மெதுவாக என்னும் பண்பை மட்டும் உணர்த்துகிறது.

இவ்வாறு காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாக உணர்த்திவரும் வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் எனப்படும்.

மொழியை ஆள்வோம்!

பொருத்துக

  1. காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல –  ஒற்றுமையின்மை
  2. கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல –  பயனற்ற செயல்
  3. பசு மரத்து ஆணி போல –  தற்செயல் நிகழ்வு
  4. விழலுக்கு இறைத்த நீர் போல –  எதிர்பாரா நிகழ்வு
  5. நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினாற் போல –  எளிதில் மனத்தில் பதிதல்

விடை : 1 – இ, 2 – ஈ, 3 – உ , 4 – ஆ, 5 – அ

அறிந்து பயன்படுத்துவோம்.

உவமைத் தொடர்கள்

நாம் பேச்சிலும் எழுத்திலும் கருத்துகளை எளிதாக விளக்குவதற்காகச் சில தொடர்களைப் பயன்படுத்துவோம். அவை உவமைத் தொடர்கள் எனப்படும்.

ஒவ்வொரு உவமைத் தொடருக்கும் தனிப் பொருள் உண்டு.

(எ.கா)

1. மடை திறந்த வெள்ளம் போல் – தடையின்றி மிகுதியாக.

திருவிழாவைக் காண மடைதிறந்த வெள்ளம் போல மக்கள் வந்தனர்.

2. உள்ளங்கை நெல்லிக்கனி போல – வெளிப்படைத் தன்மை

பாரதியின் பாடல்கள் உள்ளங்கை நெல்லிக்கனி போல அனைவருக்கும் விளங்கும்.

உவமைத் தொடர்களைப் பயன்படுத்தித் தொடர் அமைக்க.

1. குன்றின் மேலிட்ட விளக்கைப் போல

விடை: குன்றின் மேலிட்ட விளக்கைப் போல திருக்குறளின் புகழ் உலகமெங்கும் பரவியுள்ளது.

2. வேலியே பயிரை மேய்ந்தது போல

விடை: வேலியே பயிரை மேய்ந்தது போல நாட்டை காப்பாற்ற வேண்டிய தலைவர்களே மக்களை துன்புறுத்துகின்றன.

3. பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல

விடை: பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல பரிசுத் தொகையாக இலட்சம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தவனுக்குக் கோடி கிடைத்தது.

4. உடலும் உயிரும் போல

விடை: உடலும் உயிரும் போல கணவனும் மனைவியும் அன்போடு வாழ்ந்தன.

5. கிணற்றுத் தவளை போல

விடை: கிணற்றுத் தவளை போல மூடர்கள் தம் பேச்சினாலே தம் அறியாமையை வெளிப்படுத்தி விடுவர்.

மொழியோடு விளையாடு

கீழ்காணும் படம் சார்ந்த சொற்களை எடுத்து எழுதுக

Samacheer Kalvi 8th Tamil Guide Echam Book Back Solution-Padam Sarnththa Eluththugalai Eluthuga

  • உரல்
  • சுக்கு
  • சீரகம்
  • மல்லி
  • புதினா
  • பூண்டு
  • வெற்றிலை
  • வெந்தையம்
  • எண்ணெய்
  • கருஞ்சிரகம்
  • கிராம்பு
  • உலக்கை
  • மிளகு
  • பட்டை
  • பூ
  • கடுகு
  • ஏலக்காய்
  • அண்ணாச்சி
  • கொத்தமல்லி
  • வத்தல்
  • சோம்பு
  • கசகசா

வட்டத்திலுள்ள பழமொழிகளை கண்டுபிடித்து எழுதுக

Samacheer Kalvi 8th Tamil Guide Echam Book Back Solution-Vattathil ulla Pazhamozhigalai Eduthu Eluthuga

  • முயற்சி திருவினையாக்கும்
  • அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு
  • சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்
  • அறிவே ஆற்றல்
  • கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
  • நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
  • வருமுன் காப்போம்
  • சுத்தம் சோறு போடும்
  • பருவத்தே பயிர் செய்
  • பசித்து புசி

நிற்க அதற்குத் தக…

கலைச்சொல் அறிவோம்.

  • நோய் – Disease
  • நுண்ணுயிர் முறி – Antibiotic
  • சிறுதானியங்கள் – Millets
  • பட்டயக் கணக்கர் – Auditor
  • பக்கவிளைவு – Side Effect
  • மூலிகை – Herbs
  • மரபணு – Gene
  • ஒவ்வாமை – Allergy

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “எச்சம்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. பொருள் முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் எச்சம் எனப்படும்.

  1. எச்சம்
  2. வேற்றுமை
  3. பெயர்ச்சொல்
  4. வினைச்சொல்

விடை: எச்சம்

2. எச்சம் ___________ வகைப்படும்.

  1. 4
  2. 3
  3. 2
  4. 5

விடை: 2

3. பெயரைக் கொண்டு முடியும் எச்சம் __________ ஆகும்.

  1. வினையெச்சம்
  2. வினைச்சொல்
  3. பெயரெச்சம்
  4. பெயர்ச்சொல்

விடை: பெயரெச்சம்

4. பெயரெச்சம் _______________ காலத்தில் வரும்.

  1. இறந்த
  2. நிகழ்
  3. எதிர்
  4. மூன்று

விடை: மூன்று

5. செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் பெயரெச்சம் _______________ எனப்படும்.

  1. குறிப்புப் பெயரெச்சம்
  2. குறிப்புப் வினையெச்சம்
  3. தெரிநிலைப் வினையெச்சம்
  4. தெரிநிலைப் பெயரெச்சம்

விடை: தெரிநிலைப் பெயரெச்சம்

6. செயலையோ, காலத்தையோ தெளிவாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாகக் காட்டும் பெயரெச்சம் _____________ எனப்படும்.

  1. தெரிநிலைப் பெயரெச்சம்
  2. குறிப்புப் வினையெச்சம்
  3. தெரிநிலைப் வினையெச்சம்
  4. குறிப்புப் பெயரெச்சம்

விடை: குறிப்புப் பெயரெச்சம்

7. வினையைக் கொண்டு முடியும் எச்சம் ____________ எனப்படும்.

  1. பெயரெச்சம்
  2. வினைச்சொல்
  3. பெயர்ச்சொல்
  4. வினையெச்சம்

விடை: வினையெச்சம்

8. செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் வினையெச்சம் _______________ எனப்படும்.

  1. குறிப்புப் பெயரெச்சம்
  2. குறிப்புப் வினையெச்சம்
  3. தெரிநிலைப் வினையெச்சம்
  4. தெரிநிலைப் பெயரெச்சம்

விடை: தெரிநிலைப் வினையெச்சம்

9. செயலையோ, காலத்தையோ தெளிவாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாகக் காட்டும் வினையெச்சம் _____________ எனப்படும்.

  1. தெரிநிலைப் பெயரெச்சம்
  2. குறிப்புப் வினையெச்சம்
  3. தெரிநிலைப் வினையெச்சம்
  4. குறிப்புப் பெயரெச்சம்

விடை: குறிப்புப் வினையெச்சம்

10. ஒரு வினைமுற்று எச்சப்பொருள் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது _____________ எனப்படும்.

  1. வினையெச்சம்
  2. முற்றறெச்சம்
  3. முற்றா எச்சம்
  4. பெயரெச்சம்

விடை: முற்றறெச்சம்

Leave a Comment