Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.2 Konakathupattu Book Back Solution

இயல் 2.2 – கோணக்காத்துப் பாட்டு

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 8th Tamil Chapter 2.2 ‘Konakathupattu’ Here, you’ll find solutions to all the questions from the 8th Standard Tamil Book Lesson 2.2 கோணக்காத்துப் பாட்டு

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 8th Tamil Chapter 2.2 Konakathupattu Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 8th Tamil Guide PDF.

கோணக்காத்துப் பாட்டு பாடல் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Konakathupattu’ which is the first subject of class 8 Tamil. Additionally, you can also access additional questions related to the Konakathupattu subject.

Previous Lesson: ஓடை

கோணக்காத்துப் பாட்டு பாடல்

உருமங்கட் டியமுகிலால் – கோணக்காத்து
உழன்று உழன்றுமெத்த அடித்ததினால்
பெரிதான வீடுகளெல்லாம் – கோப்புடனே
பிரிந்தும் கூரைத்தட்டுச் சரிந்ததங்கே

சிங்காரமாய் வாங்கல்நகரில் – வைத்திருந்த
தென்னம்பிள்ளை அத்தனையும் வின்னமாச்சுதே
மங்காத காங்கயநாட்டில் – மேட்டுக்காட்டில்
மாளாத பருத்திஎல்லாம் கோலாகப்போச்சுதே

ஆரங்கள்வைத்த சுவரெல்லாம் – மெத்தைவீடு
அடியோடே விழுந்ததங்கே கெடிகலங்கித்
தாரங்களும் பிள்ளைகளுடன் – கூட்டிக்கொண்டு
தானடந்து வேகமுடன் கூகூவென்றார்

வாகுடனே தொண்டைமான்சீமை – தன்னிலே
வளர்ந்தோங்கும் மாநகரம் தன்னிலேதானே
சேகரமாய் வைத்தமரங்கள் – அத்தனையும்
சின்னபின்ன மாய்ஒடிந்து பின்னமாச்சுதே

சம்பிரமுடன் கப்பல்களெல்லாம் – கடலிலே
தானடந்து வேகமுடன் வரும்போதிலே
கொம்புசுத்திக் கோணக்காத்து – காலனைப்போல்
கோணமழை வந்துகப்பல் தான்கவிழ்ந்ததே

ஆர்க்காடு மைசூர்வரைக்கும் – கோணக்காத்து
அலறி அலறிமெத்த அடித்ததனால்
மார்க்கமான சாலையில்போன – சனங்களெல்லாம்
மயங்கி மயங்கிமெத்தத் தவித்தார்களே

தெத்துக்காடு காளப்பநாயக்கன் – பட்டியிலே
செத்திறந்த ஆடுமாடு மெத்தவுண்டாம்
சித்தர்கள் பொருந்திவாழும் – கொல்லிமலை
சேர்ந்திருந்த நாடெல்லாம் காத்தடிச்சுதே

இப்படிக்கிச் சேதங்களானால் – குமரேசா
எப்படிப் பிழைத்துநாங்கள் ஒப்பிதமாவோம்
மெய்ப்புடன்வே லாயுதங்கொண்டு – வருகின்ற
விக்கினமெல் லாம்தீர்த்துக் காத்திடீரையா

– வெங்கம்பூர் சாமிநாதன்

பாடலின் பொருள்

திரண்டு எழுந்த மேகங்களால் உருவான காற்று வேகமாக அடித்ததால் பெரிய வீடுகளின் கூரைகள் எல்லாம் மொத்தமாகப் பிரிந்து சரிந்தன. வாங்கல் என்னும் ஊரில் அழகாக வைக்கப்பட்ட தென்னம்பிள்ளைகள் எல்லாம் வீணாயின. அழிவில்லாத காங்கேய நாட்டின் மேட்டுப் பகுதிகளில் வளர்ந்திருந்த பருத்திச் செடிகள் எல்லாம் சிதைவு அடைந்து வெறும் குச்சிகளாக மாறின.

அழகிய சுவர்களை உடைய மாடி வீடுகள் அடியோடு வீழ்ந்தன. ஆடவர் தம் மனைவி, பிள்ளைகளுடன் “கூ” “கூ” என்று அலறியபடி ஓடினர். தொண்டைமான் நாட்டில் சிறப்பாக வைக்கப்பட்ட மரங்கள் அனைத்தும் சின்னாபின்னாமாக ஒடிந்து விழுந்தன. கடலில் விரைந்து வந்த கப்பல், எமனைப் போல வந்த பெருமழையினாலும் சுழல் காற்றினாலும் கவிழ்ந்தது.

ஆர்க்காடு முதல் மைசூர் வரை வீசிய பயுலால் சாலைகளில் சென்ற மக்கள் தடுமாறித் தவித்தனர். தெத்துக்க்காடு, காளப்பநாயக்கன்பட்ட ஆகிய பகுதிகளில் ஏராளமான ஆடு மாடுகள் இறந்தன. சித்தர்கள் வாழும் கொல்லி மலையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் புயல் அடித்தது.

முருகப் பெருமானே! இத்தகைய அழிவுகளை நாங்கள் எவ்வாறு தாங்குவோம்? எங்களுக்கு வருகின்ற இடர்களை எல்லாம் தடுத்து எங்களைக! காப்பாயா

நூல்வெளி

  • நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்ட காலங்களில் மக்கள் பட்ட துயரங்களை அக்காலத்தில் வாழ்ந்த புலவர்கள் கும்மிப் பாடல்களாக பாடினர்.
  • பேச்சுத் தமிழில் அமைந்த இவை பஞ்சக்கும்மிகள் என்று அழைக்கப்பட்டன.
  • புலவர் செ.இராசு தொகுத்த பஞ்சக் கும்மிகள் என்னும் நூலில் இடம்பெற்றுள்ள வெங்கம்பூர் சாமிநாதன் இயற்றிய கோணக்காத்துப் பாட்டு என்னும் காத்து நொண்டிச் சிந்திலிருந்து சில பாடல்கள் இங்குத் தரப்பட்டுள்ளன

சொல்லும் பொருளும்

  • முகில் – மேகம்
  • வின்னம் – சேதம்
  • கெடிகலங்கி – மிக வருந்தி
  • வாகு – சரியாக
  • சம்பிரமுடன் – முறையாக
  • காலன் – எமன்
  • சேகரம் – கூட்டம்
  • மெத்த – மிகவும்
  • காங்கேய நாடு – கொங்குமண்டலத்தின் 24 நாடுகளுள் ஒன்று

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. வானில் கரு __________ தோன்றினால் மழை பொழியும் என்பர்.

  1. முகில்
  2. துகில்
  3. வெயில்
  4. கயல்

விடை : முகில்

2. முறையான உடற்பயிற்சியும் சரிவிகித உணவும் __________யும் ஓட்டிவிடும்.

  1. பாலனை
  2. காலனை
  3. ஆற்றலை
  4. நலத்தை

விடை : காலனை

3. விழுந்ததங்கே என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________

  1. விழுந்த + அங்கே
  2. விழுந்த + ஆங்கே
  3. விழுந்தது + அங்கே
  4. விழுந்தது + ஆங்கே

விடை : விழுந்தது + அங்கே

4. செத்திறந்த என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________

  1. செ + திறந்த
  2. செத்து + திறந்த
  3. செ + இறந்த
  4. செத்து + இறந்த

விடை :  செத்து + இறந்த

5. பருத்தி + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் __________

  1. பருத்திஎல்லாம்
  2. பருத்தியெல்லாம்
  3. பருத்தெல்லாம்
  4. பருத்திதெல்லாம்

விடை : பருத்தியெல்லாம்

குறு வினா

1. கப்பல் கவிழ்ந்ததற்குக் காரணமாகக் கோணக்காத்துப் பாட்டு கூறுவது யாது?

எமனைப் போல வந்த பெருமையும், சூழல் காற்றும் கப்பல் கவிழ்ந்ததற்குக் காரணமாகும்.

2. புயல்காற்றினால் தொண்டைமான் நாட்டில் ஏற்பட்ட அழிவு யாது?

தொண்டைமான் நாட்டில் சிறப்பாக வைக்கப்பட்ட மரங்கள் அனைத்தும் சின்னா பின்னமாகப் புயல் காற்றால் ஒடிந்து விழுந்தன.

3. கொல்லிமலை பற்றிப் பாடல் கூறும் செய்தி யாது?

சித்தர்கள் வாழும் மலை கொல்லிமலை. அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் புல் அடித்தது.

சிறு வினா

1. புயல் காற்றினால் மரங்களுக்கு ஏற்பட்ட நிலைகளாகப் பாடல் குறிப்பிடும் கருத்துகள் யாவை?

வொங்கல் என்னும் ஊரில் அழகாக வைக்கப்பட்ட தென்னம்பிள்ளைகள் எல்லாம் வீணாயின. தொண்டைமான் நாட்டில் சிறப்பாக வைக்கப்பட்ட மரங்கள் அனைத்தும் சின்னா பின்னமாகப் புயல் காற்றால் ஒடிந்து விழுந்தன.

2. கோணக்காற்றால் வீடுகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் யாவை?

திரண்டு எழுந்த மேகங்களால் உருவான காற்று வேகமாக அடித்ததால் பெரிய வீடுகளின் கூரைகள் எல்லாம் மொத்தமாகப் பிரிந்து சரிந்தன. அழகிய சுவர்களை உடைய மாடி வீடுகள் அடியோடு வீழ்ந்தன.

சிந்தனை வினா

இயற்கைச் சீற்றங்களால் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கச் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள்?

  • வெள்ளப் பெருக்குக் காலங்களில் ஆற்றோரமோ, நீர்நிலைகள் அருகிலோ வசிப்போர்கள் மேட்டுப் பகுதிக்கு சென்று தங்குதல் வேண்டும்.
  • எரிமலை வெடிக்கும் சூழலில், மலைக்கு அருகில் வசிப்போர் பாதுகாப்பான இடத்திற்கு சென்று தங்குதல் வேண்டும்.
  • காட்டுத்தீ ஏற்படும் நேரத்தில் காட்டிற்கு அருகில் வசிப்போர் நகர்புறத்திற்கு வந்த தங்க வேண்டும்.
  • சுனாமி ஏற்படும்போது கடற்கரையில் வசிப்போர், கடலை விட்டு பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் சென்று தங்கதல் வேண்டும்.
  • நிலநடுக்கம் ஏற்படும் சூழலில், கட்டத்தை விட்டு வெளியேறி வெட்ட வெளியில் சென்று தங்குதல் வேண்டும்.

பின்வரும் பகுதியில் “கோணக்காத்துப் பாட்டு” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. தமிழ்நாடு அடிக்கடி _____________ பாதிக்கப்படும் பகுதியாகும்.

  1. மழையினால்
  2. புயலால்
  3. சுனாமியினால்
  4. நிலநடுக்கத்தால்

விடை : தமிழ்நாடு

2. வாகு என்பதன் பொருள் ______________

  1. சரியாக
  2. தவறாக
  3. நேராக
  4. குறுக்கே

விடை : சரியாக

3. வாங்கல் ஊரில் வைக்கப்பட்ட ____________ எல்லாம் வீணாயின

  1. பனைமரம்
  2. மாமரம்
  3. தென்னம்பிள்ளைகள்
  4. வாழைமரம்

விடை : தென்னம்பிள்ளைகள்

4. காங்கேய நாட்டில் ____________ செடிகள் எல்லாம் சிதைவடைந்தன

  1. மிளகாய்
  2. மல்லிகை
  3. வெற்றிலை
  4. பருத்தி

விடை : பருத்தி

5. சித்தர்கள் வாழும் இடம் ____________

  1. திருவண்ணாமலை
  2. மருதமலை
  3. கொல்லி மலை
  4. சென்னி மலை

விடை : கொல்லி மலை

6. கோணகாத்துப் பாட்டில் வரும் குறிப்பிடப்படும் தெய்வம்

  1. சிவன்
  2. திருமால்
  3. பிரம்மன்
  4. முருகன்

விடை : முருகன்

7. வீடுகள் + எல்லாம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ____________

  1. வீடுகள் வெல்லாம்
  2. வீடுகள் எல்லாம்
  3. வீடுகலெல்லாம்
  4. வீடுகளெல்லாம்

விடை : வீடுகளெல்லாம்

8. தென்னம் + பிள்ளை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ____________

  1. தென்னம்பிள்ளை
  2. தென்னம்ப்பிள்ளை
  3. தென்னை பிள்ளை
  4. தென்னைப் பிள்ளை

விடை : தென்னம்பிள்ளை

சேர்த்து எழுதுக

  • சுவர் + எல்லாம் = சுவரெல்லாம்
  • தான் + அடைந்திருந்த = தானடந்திருந்த
  • செத்து + இறந்த = செத்திறந்து
  • மார்க்கம் + ஆனது = மார்க்கமானது
  • வேகம் + உடன் = வேகமுடன்

குறு வினா

1. ஆடு, மாடு எப்பகுதியில் இறந்ததுள்ளன?

தெத்துக்க்காடு, காளப்பநாயக்கன்பட்டி

2. கவிஞர் முருகப் பெருமானிடம் மக்களை  காக்க எவ்வாறு வேண்டினார்?

முருகப் பெருமானே! இத்தகைய அழிவுகளை நாங்கள் எவ்வாறு தாங்குவோம்? எங்களுக்கு வருகின்ற இடர்களை எல்லாம் தடுத்து எங்களை! காப்பாயா

3. பஞ்சக்கும்மிகள் எனப்படுவன யாவை?

பேச்சுத் தமிழில் அமைந்த கும்மிப் பாடல் பஞ்சக்கும்மிகள் என்று அழைக்கப்பட்டன.

4.புலவர் செ.இராசு நூலினை தொகுத்த நூலின் பெயர் யாது?

பஞ்சக்கும்மிகள்

5. வெங்கம்பூர் சாமிநாதன் இயற்றிய பாடல் எங்கு உள்ளன?

கோணக்காத்துப் பாட்டு  & காத்து நொண்டிச்சிந்து

Leave a Comment