Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.1 Indiya Thesiya Ranuvathil Tamilar Pangu Book Back Solution

இயல் 7.1 – இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 9th Tamil Chapter 7.1 ‘Indiya Thesiya Ranuvathil Tamilar Pangu’, you’ll find solutions to all the questions from the 9th Standard Tamil Book Lesson 7.1 இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 9th Tamil Chapter 7.1 Indiya Thesiya Ranuvathil Tamilar Pangu Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 9th Tamil Guide PDF.

இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Indiya Thesiya Ranuvathil Tamilar Pangu’ which is the first subject of class 9 Tamil. Additionally, you can also access additional questions related to the Indiya Thesiya Ranuvathil Tamilar Pangu Subject.

Previous Lesson: திருக்குறள்

பலவுள் தெரிக

1. இந்திய தேசிய இராணுவம் _____________ இன் தலைமையில் _____________ உருவாக்கினர்.

  1. சுபாஷ் சந்திரபோஸ், இந்தியர்
  2. சுபாஷ் சந்திரபோஸ், ஜப்பானியனர்
  3. மோகன் சிங், ஜப்பானியர்
  4. மோகன் சிங், இந்தியர்

விடை : மோகன் சிங், ஜப்பானியர்

2. கூற்று – இந்திய தேசிய இராணுவப்படைத் தலைவராக இருந்த தில்லான், “இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்தான்” என்றார்.

காரணம் – இந்திய தேசிய இராணுவத்திற்கு வலுசேர்த்த பெருமைக்குரியவர்கள் தமிழர்கள்.

  1. கூற்றும், காரணமும் சரி
  2. கூற்று சரி, காரணம் தவறு
  3. கூற்று தவறு, காரணம் சரி
  4. கூற்றும், காரணமும் தவறு

விடை : கூற்றும், காரணமும் சரி

குறு வினா

1. இந்திய தேசிய இராணுவத்தில் குறிப்பிடத் தகுந்த தமிழர்கள் யாவர்?

பசும்பொன் முத்துராமலிங்கனார், ஜானகி, இராஜமணி, கேப்டன் லட்சுமி, சிதம்பரம் லோகநாதன்

2. தாய் நாட்டுக்காக உழைக்க விரும்பினால் எப்பணியைத் தேர்ந்தெடுப்பீர்கள்? ஏன்?

தாய் நாட்டுக்காக உழைக்க விரும்பினால் இராணுவப் பணியைத் தேர்ந்தெடுப்பேன்.

காரணம் –  என் தாய்நாட்டையும், தாய்நாட்டு மக்களையும் காப்பாற்றுவதற்காக.

3. டெல்லி நோக்கிச் செல்லுங்கள் என்ற முழுக்கம் யாரால் எப்போது செய்யப்பட்டது?

சிங்கப்பூரில் இந்திய தேசிய இராணுவத்தின் பொறுப்பு ஏற்க வந்தபோது 1943-ம் ஆண்டு ஜூலை மாதம் 9-ம் தேதி மாபெரும் கூட்டத்தில் டெல்லி நோக்கி செல்லுங்கள் என்ற முழக்கம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களால் செய்யப்பட்டது.

சிறு வினா

குறிப்பு வரைக – “டோக்கியோ கேடட்ஸ்”

இந்திய தேசிய இராணுவத்தில் இருந்து 45வீரர்கள் நேதாஜியால் தேர்வு செய்யப்பட்டு, வான்படைத் தாக்குதலுக்கான சிறப்புப் பயிற்சி பெறுவதற்காக, ஐப்பானில் உள்ள இம்பீரிலியல் மிலிட்டரி அகடமிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அந்த 45 பேர் கொண்ட பயிற்சிப் பிரிவின் பெயர் தான் டோக்கியோ கேடட்ஸ்.

2. பனியிலும், மலையிலும் எல்லைக் காக்கும் இந்திய வீரர்களின் பணியைப் பாராட்டி உங்கள் கையெழுத்து இதழுக்கு ஒரு துணுக்குச் செய்தி எழுதுக

  • நாட்டையும் தன் நாட்டு மக்களையும் காக்க தன் குடும்பம் மறந்து பணி செய்வோர் இராணுவ வீரர்கள்.
  • கடும் வெயில், கடுங்குளிர், புயல் மழை, சூறாவளி, சுனாமி, பூகம்பம் என எது வந்தாலும் தாய்நாட்டு மக்களைக் காக்கும் தகைசால் மாமனிதர்கள் இராணுவ வீரர்கள்.
  • குண்டு மழை பொழியும் போர்களத்தில் நெஞ்சம் நிமிர்த்திப் பேராடும் பண்பாளர்கள் அவர். தன்  நாட்டுக்காகத் தன்னுயிரைக் கொடுக்கும் தியாக வள்ளல்கள்.
  • மெழுகுவர்த்தி போல தன்னைத் தன் நாட்டிற்காக உருக்கிக் கொள்பவர்கள். அவர்கள் பணிக்கு எங்கள் நெஞ்சார்ந்த வணக்கங்கள்.

நெடு வினா

இந்திய தேசிய இராணுவத்தின் தூண்களாக திகழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பதை கட்டுரை வழி நிறுவுக.

முன்னுரை:-

இந்திய விடுதலைப்போரில் இந்திய தேசிய இராணுவத்தின் தூண்களாகத் திகழ்தவர்கள் தமிழர்கள். அவர்களைப் பற்றி இங்கு காண்போம்.

பசும்பொன் முத்துராமலிங்கனார்:-

1943 இல் அன்றைய ஆங்கில அரசை இந்திய தேசிய இராணுவப்படை எதிர்த்தபோது, பசும்பொன் முத்துராமலிங்கனார் விடுதலை உணர்வு கொண்ட வலிமை மிக்க தமிழர்ப் பட்டாளங்களை ஒன்றிணைத்து, இந்திய இராணுவத்திற்கு வலு சேர்த்தார். அதனால், இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும், ஆத்மாவும் தமிழர்கள் என்றால் தில்லான்.

இரண்டாம் உலகப்போர்:-

தமிழர் துணையுடன் போராடிய நேதாஜியை, ஆங்கிலப் பிரதமர் சர்ச்சில் கோபம் அடைந்து, “மலேயாவில் உள்ள தமிழர்களின் இரத்தம் நேதாஜியின் மூளையில் கட்டியாக உள்ளது” என்றார். அதற்கு நேதாஜி ” தமிழினம் தான் ஆங்கிலேயரை அழிக்கும்” என்றார்.

மகளிர்ப்படை:-

ஜான்சி ராணி பெயரில் பெண்கள் படை உருவாக்கப்பட்டது. இதன் தலைவர் டாக்டர் லட்சுமி. இதில் தமிழகப் பெண்கள் பலர் பங்கேற்றனர். தலைசிறந்தவர்களாக ஜானகி, இராஜாமணி ஆகியோர் விளங்கினார். நேதாஜி அமைத்த தற்காலிக அரசில் கேப்டன் லட்சுமி, சிதம்பர லோகநாதன் முதலான தமிழர்கள் அமைச்சர்களாக விளங்கினர்.

வான் படை:-

இந்திய தேசிய இராணுவத்தில் இருந்து 45வீரர்கள் நேதாஜியால் தேர்வு செய்யப்பட்டு, வான்படைத் தாக்குதலுக்கான சிறப்புப் பயிற்சி பெறுவதற்காக, ஐப்பானில் உள்ள இம்பீரிலியல் மிலிட்டரி அகடமிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அந்த 45 பேர் கொண்ட பயிற்சிப் பிரிவின் பெயர் தான் டோக்கியோ கேடட்ஸ். இதில் பெரும்பாலானோர் தமிழர்கள். அதில் சிறந்து விளங்கியவர் கேப்டன் தாசன். இவர் இந்தியாவில் செசல்ஸ் நாட்டுத் தூதுவராகப் பணியாற்றியவர்.

முடிவுரை:-

நாட்டிற்காக உயிர் கொடுத்த முகம் தெரியாத தமிழர்களின் உணர்வைப் போற்றி வழிபடுவோம் அவர்தம் உன்னத செயல்களை உலகறிய செய்வோம்.

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1. இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற நாள்

  1. 14.02.1942
  2. 15.02.1942
  3. 14.03.1942
  4. 15.03.1942

விடை : மோகன் சிங்

2. இந்திய தேசிய இராணுவம் படை ஏற்படுத்தப்பட்டபோது  தலைமை ஏற்றவர் 

  1. நேதாஜி
  2. மோகன் சிங்
  3. கேப்டன் லட்சுமி
  4. பசும்பொன் முத்துராமலிங்கனார்

விடை : மோகன் சிங்

3. சிங்கப்பூர் கூட்டத்தின்போது நேதாஜி முழங்கிய முழக்கம்

  1. டெல்லி நோக்கிச் செல்லுங்கள்
  2. தலைநகர் காப்போம்
  3. சுதந்திரம் எனது பிறப்புரிமை
  4. சுயராஜ்யம் காப்பமோம்

விடை : டெல்லி நோக்கிச் செல்லுங்கள்

4. நேதாஜி டெல்லி நோக்கிச் செல்லுங்கள் என்ற போர்முழக்கம் செய்த நாள்

  1. 09.06.1943
  2. 09.07.1943
  3. 09.07.1944
  4. 09.06.1944

விடை : 09.07.1943

5. தமிழகத்திலிருந்து இந்திய தேசிய இராணுவத்திற்குப் பெரும் படையைத் திரட்டி அனுப்பியவர் 

  1. மோகன் சிங்
  2. கேப்டன் லட்சுமி
  3. நேதாஜி
  4. பசும்பொன் முத்துராமலிங்கனார்

விடை : பசும்பொன் முத்துராமலிங்கனார்

6. இந்திய தேசிய இராணுவபடைத் தலைவர்

  1. மோகன் சிங்
  2. கேப்டன் லட்சுமி
  3. தில்லான்
  4. நேதாஜி

விடை : தில்லான்

7. நான் மறுபடியும் பிறந்தால் ஒரு தென்னிந்தியத் தமிழனாகப் பிறக்க வேண்டும் என்ற கூற்றினை கூறியவர்

  1. பசும்பொன் முத்துராமலிங்கனார்
  2. மோகன் சிங்
  3. கேப்டன் லட்சுமி
  4. நேதாஜி

விடை : பசும்பொன் முத்துராமலிங்கனார்

8. இந்திய தேசிய இராணுவத்தில் பெண்கள் படையானது __________ பெயரால் உருவாக்கப்பட்டது.

  1. டாக்டர் லட்சுமி
  2. இராஜாமணி
  3. ஜான்சிராணி
  4. வேலு நாச்சியார்

விடை : ஜான்சிராணி

9. தமிழக மக்கள் துணையுடன் போராடிய நேதாஜியைக் கண்டு கோபம் கொண்டவர்

  1. மவுண்ட்பேட்டன் பிரபு
  2. சர்ச்சில்
  3. அப்துல்காதர்
  4. லாலா லஜிபதி ராய்

விடை : சர்ச்சில்

10. இந்திய தேசிய இராணுவம் ஆங்கிலேயரை வென்று இந்தியாவிற்குள் ___________ என்ற இடத்தில் மூவண்ணக் கொடியை ஏற்றியது.

  1. கல்கத்தா
  2. மொய்ராங்
  3. மும்பை
  4. அலகாபாத்

விடை : மொய்ராங்

11. இந்திய தேசிய இராணுவம் – தமிழர்பங்கு என்னும் நூலை எழுதியவர்

  1. பாரதியார்
  2. மறைமலையடிகள்
  3. மா.சு. அண்ணாமலை
  4. சுரதா

விடை : மா.சு. அண்ணாமலை

குறு வினா

1. பசும்பொன் முத்துராமலிங்கனார் இந்திய தேசிய இராணுவத்திற்கா செய்த பணிகளை கூறுக

1943 இல் அன்றைய ஆங்கில அரசை இந்திய தேசிய இராணுவப்படை எதிர்த்தபோது, பசும்பொன் முத்துராமலிங்கனார் விடுதலை உணர்வு கொண்ட வலிமை மிக்க தமிழர்ப் பட்டாளங்களை ஒன்றிணைத்து, இந்திய இராணுவத்திற்கு வலு சேர்த்தார்..

2. தமிழர்கள் பற்றி தில்லான் கூறிய கருத்தினை கூறுக.

இந்திய தேசிய இராணுவத்தின் தலைவராக இருந்த தில்லான் “இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும், ஆத்மாவும் தமிழர்கள்” என்றார்.

3. நேதாஜியின் மீது கோபம் கொண்ட சர்ச்சில் கோபம் அடைந்து கூறிய செய்தி யாது?

தமிழ் மக்கள் துணையுடன் போராடிய நேதாஜியைக் கண்டு ஆங்கிலப் பிரதமர் சர்ச்சில் கோபம் கொண்டார். ‘மலேயாவில் உள்ள தமிழர்களின் இரத்தம் நேதாஜியின் மூளையில் கட்டியாக உள்ளது ’ என்று சர்ச்சில் கூறினார்.

4. சர்ச்சில் கூறிய கருத்திற்கு நேநாஜி கூறிய மறுமொழியை கூறுக

சர்ச்சில் கூறிய கருத்திற்கு நேதாஜி இந்தத் தமிழினம்தான் ஆங்கிலேயர்களை அழிக்கும் என்று பதில் கூறினார்.

5. மரணதண்டனை பெற்ற அப்துல்காதர் கூறிய கருத்தினை எழுதுக

வாழ்வின் பொருள் தெரிந்தால்தான் மனிதன் மேல் நிலை அடைவான். நாட்டிற்காக உயிர்நீத்த முழுநிலவினைப் போன்ற தியாகிகள் முன்பு நாங்கள் மெழுகுவர்த்திதான்.

6. நேதாஜி தமிழக வீரர்களைப் பற்றி என்ன கூறியதாக பசும்பொன் முத்துராமலிங்கனார் கூறுகிறார்?

நேதாஜி தமிழக வீரர்களைப் பாராட்டி நான் மறுபடியும் பிறந்தால் ஒரு தென்னிந்திய தமிழனாகப் பிறக்க வேண்டும் என்று நேதாஜி கூறியதாகப் பசும்பொன் முத்துராமலிங்கனார் கூறுகிறார்

7. நேதாஜியின் பொன் மொழி கூறிய பொன்மொழி பற்றி எழுதுக

  • அநீதிகளுக்கும் தவறான செயல்களுக்கும் மனம் ஒப்ப இடம் தருதல் மிகப் பெரிய குற்றமாகும். நீங்கள் நல்வாழ்வைத் தந்தே ஆக வேண்டும் என்பதுதான் காலத்தால் மறையாத சட்டமாகும். எந்த விலை கொடுத்தாவது சமத்துவத்திற்குப் போராடுவதே மிகச்சிறந்த நற்குணமாகும்.
  • மனதை மலரவைக்கும் இளங்கதிரவனின் வைகறைப் பொழுது வேண்டுமா? அப்படியானால் இரவில் இருண்ட நேரங்களில் வாழக் கற்றுக்கொள்.

8. இந்திய தேசிய இராணுவத்தில் உருவாக்கிய மகளிர் படை குறித்து எழுதுக.

  • ஜான்சிராணி பெயரில் பெண்கள் படை உருவாக்கப்பட்டது.
  • இதன் தலைவர் டாக்டர் லட்சுமி.
  • இதில் தமிழகப் பெண்கள் பலர் பங்கேற்றனர்.
  • தலைசிறந்தவர்களா ஜானகி, இராஜாமணி ஆகியோர் விளங்கினர்.

Back to 9th Tamil Guide Home Page

Leave a Comment