Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 7.2 Seevaga Sinthamani Book Back Solution

இயல் 7.2 – சீவக சிந்தாமணி

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 9th Tamil Chapter 7.2 Seevaga Sinthamani’, you’ll find solutions to all the questions from the 9th Standard Tamil Book Lesson 7.2 சீவக சிந்தாமணி

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 9th Tamil Chapter 7.1 Indiya Thesiya Ranuvathil Tamilar Pangu Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 9th Tamil Guide PDF.

சீவக சிந்தாமணி பாடல் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Seevaga Sinthamani’ which is the first subject of class 9 Tamil. Additionally, you can also access additional questions related to the Seevaga Sinthamani Subject.

Previous Lesson: இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு

சீவக சிந்தாமணி பாடல்

ஏமாங்கத நாட்டு வளம்

பார் போற்றும் ஏமாங்கதம்

காய்மாண்ட தெங்கின் பழம்வீழக் கமுகின் நெற்றிப்
பூமாண்ட தீந்தேன் தொடை கீறி வருக்கை போழ்ந்து
தேமாங்கனி சிதறி வாழைப் பழங்கள் சிந்தும்
ஏமாங்கதம் என்று இசையால்திசை போயது உண்டே!

வாரி வழங்கும் வள்ளல்

வள்ளல் கைத்தல மாந்தரின் மால்வரைக்
கொள்ளை கொண்ட கொழுநிதிக் குப்பையை
உள்ளம் இல்லவர்க்கு ஊர்தொறும் உய்த்துஉராய்
வெள்ளம் நாடு மடுத்து விரைந்ததே.

மணம் கமழும் கழனி

நெறிமருப்பு எருமையின் ஒருத்தல் நீள்இனம்
செறிமருப்பு ஏற்றினம் சிலம்பப் பண் உறீஇப்
பொறிவரி வராலினம் இரியப் புக்குடன்
வெறிகமழ் கழனியுள் உழுநர் வெள்ளமே.

நூல் வெளி

  • ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று.
  • விருத்தப்பாவில் இயற்றப்பட்ட முதல் காப்பியம்.
  • மணநூல் என அழைக்கப்படுகிறது.
  • இலம்பகம் என்ற உட்பிரிவுகளை கொண்டது.
  • 13 இலம்பகங்களை கொண்டது.
  • இதனை இயற்றியவர் திருத்தக்க தேவர்
  • சமண மதத்தை சார்ந்தவர்
  • இன்பச்சுவை மிக்க இலக்கியமும் இயற்ற முடியும் என்று நிறுவும் வகையில் இக்காப்பியத்தை இயற்றினார்.
  • இவர் கி.பி. 9-ம் நூற்றாண்டைச் சார்ந்தவர்
  • சீவக சிந்தாமணியை பாடுவதற்கு முன்னோட்டமாக நரிவிருத்தம்  என்னும் நூலை இயற்றியுள்ளார்.

சொல்லும் பொருளும்

  • தெங்கு – தேங்காய்
  • இசை – புகழ்
  • வருக்கை – பலாப்பழம்
  • நெற்றி – உச்சி
  • மால்வரை – பெரியமலை
  • மடுத்து – பாய்ந்து
  • கொழுநிதி – திரண்ட நிதி
  • மருப்பு – கொம்பு
  • வெறி – மணம்
  • கழனி – வயல்
  • செறி – சிறந்த
  • இரிய – ஓட
  • அடிசில் – சோறு
  • மடிவு – சோம்பல்
  • கொடியன்னார் – மகளிர்
  • நற்றவம் – பெருந்தவம்
  • வட்டம் – எல்லை
  • வெற்றம் – வெற்றி

இலக்கணக் குறிப்பு

  • தேமாங்கனி, தண்டகல், நற்றவம் – பண்புத்தொகை
  • விளைக – வியங்கோள் வினைமுற்று
  • தேர்ந்த – பெயரச்சம்
  • இறைஞ்சி  – வினையெச்சம்
  • கொடியனால் – இடைக்குறை

பகுபத உறுப்பிலக்கணம்

1. இறைஞ்சி = இறைஞ்சு +இ

  • இறைஞ்சு – பகுதி
  • இ – வினையெச்ச விகுதி

2. ஓம்புவார் = ஓம்பு + வ் +ஆர்

  • ஓம்பு – பகுதி
  • வ் – எதிர்கால இடைநிலை
  • ஆர் – பலர் பால் வினைமுற்று விகுதி

பலவுள் தெரிக

1. வெறிகமழ் கழனியுள் உழுநர் வெள்ளமே இவ்வடி உணர்த்தும் பாெருள் யாது?

  1. மணம் கமழும் வயலில் உழவர் வெள்ளமாய் உழுதிருந்தனர்
  2. வறண்ட வயலில் உழவர் வெள்ளமாய் அமர்ந்திருந்தனர்
  3. செறிவான வயலில் உழவர் வெள்ளமாய் கூடியிருந்தனர்
  4. பசுமையான வயலில் உழவர் வெள்ளமாய் நிறைந்திருந்தனர்

விடை : மணம் கமழும் வயலில் உழவர் வெள்ளமாய் உழுதிருந்தனர்

2. பாதிரி ஒத்த பூ, செய்கோலம் இலக்கணக் குறிப்புத் தருக

  1. உருவகத்தொடர், வினைத்தொகை
  2. உவமைத்தாெடர், வினைத்தொகை
  3. வினைத்தொகை, பண்புத்தொகை
  4. வினைத்தொகை, உருவகத்தொடர்

விடை : உவமைத்தாெடர், வினைத்தொகை

குறு வினா

சுருக்கொண்ட பச்சைப் பாம்பு எதற்கு உவமையாக்கப்பட்டுள்ளது?

சுருக்கொண்ட பச்சைப் பாம்பு நெற்பயிர்களின் தோற்றத்திற்கு உவமையாக்கப்பட்டுள்ளது

சிறு வினா

ஏமாங்க நாட்டில் எவையெல்லாம் ஆயிரக்கணக்கில் இருப்பதாக திருத்தக்க தேவர் பாடியுள்ளார்?

  • ஆயிரம் வகையான உணவுகள்
  • உணவளிக்கும் அறச்சாலைகள் ஆயிரம்
  • மகளிர் ஒப்பனை செய்ய மணிமணிமாடம் ஆயிரம்
  • கம்மியர் ஆயிரம் பேர்
  • திருமணங்கள் ஆயிரம்

இப்படி ஆயிரம் நிகழ்வுகள் ஏமாங்க நாட்டில் குறைவின்றி நடக்கின்றன.

நெடு வினா

ஏமாங்க நாட்டு வருணணைகளை நும் ஊர் குறித்த வளங்களோடு ஒப்பிடுக

ஏமாங்க வருணணை எங்கள் ஊர் வளம்
தென்னை மரத்திலிருந்து விழுகின்ற தேங்காய் தேனடையைக் கிழித்து பலாப் பழத்தைப் பிளந்து, மாங்கனியை சிதற வைத்து, வாழைப்பழத்தை உதிரச்செய்தது தேங்காய்கள் வயல் ஓடைகளில் விழுந்து பூக்களை தழுவிச் செல்கிறது.
வள்ளல்களைப் போன்றது வெள்ளம். அது மலையில் இருந்து செல்வத்தை அடித்து வந்து ஊர் மக்களுக்கு வழங்கும் வகையில் பாய்கின்றது. பூக்களையும், பழங்களையும் வெள்ளம் அடித்து வந்து ஊரினில் சேர்க்கும்.
எருமைகளும், எருதுகளும் பேரொலி எழுப்புகின்றன. அது கேட்டு வாரல் மீன்கள் ஓடுகின்றன. ஏர் மாடுகளின் சத்தம் வயல்களில் எங்கும் கேட்கும்.

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “சீவக சிந்தாமணி” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1. சீவக சிந்தாமணி ___________காப்பியங்களுள் ஒன்று.

  1. ஐஞ்சிறுங்
  2. எட்டுத்தொகை
  3. பத்துப்பாட்டு
  4. ஐம்பெருங்

விடை : ஐம்பெருங்

2. விருத்தப்பாவால் இயற்றப்பட்ட முதல் காப்பியம்

  1. சிலப்பதிகாரம்
  2. குண்டலகேசி
  3. வளையாபதி
  4. சீவக சிந்தாமணி

விடை : சீவக சிந்தாமணி

3. சீவகசிந்தாமணி ___________ இலம்பகங்களைக்  கொண்டுள்ளது

  1. 13
  2. 10
  3. 12
  4. 11

விடை : 13

4. சீவகசிந்தாமணி _____________ அழைக்கப்படுகிறது

  1. குண நூல்
  2. துறவற நூல்
  3. மண நூல்
  4. தெய்வ நூல்

விடை : மண நூல்

5. திருதக்கத்தேவர் எழுதிய நூல்

  1. சீவக சிந்தாமணி
  2. சிலப்பதிகாரம்
  3. மணிமேகலை
  4. குண்டலகேசி

விடை : சீவக சிந்தாமணி

6. திருத்தக்கத்தேவர் சீவக சிந்தாமணி பாடுவதற்கு முன்னோட்டமாக _____________ நூலை இயற்றியுள்ளார்

  1. மனோன்மணியம்
  2. நரிவிருத்தம்
  3. திருவாதிரை
  4. தேன்மொழி

விடை : நரிவிருத்தம்

7. வட்டம் என்பதன் பொருள்

  1. பெருந்தவம்
  2. சோம்பல்
  3. சுறுசுறுப்பு
  4. எல்லை

விடை : எல்லை

8. நாட்டு வளம் இடம்பெறும் இலம்பகம்

  1. கேமசரியார் இலம்பகம்
  2. புதுமையார் இலம்பகம்
  3. நாமகள் இலம்பம்
  4. முக்தி இலம்பகம்

விடை : நாமகள் இலம்பம்

9. நற்றவம் இலக்கணக்குறிப்பு தருக

  1. வினைத்தொகை
  2. பண்புத்தொகை
  3. வினையெச்சம்
  4. பெயரெச்சம்

விடை : பண்புத்தொகை

10. கொடியனார் இலக்கணக்குறிப்பு தருக

  1. வினைத்தொகை
  2. இடைக்குறை
  3. வினையெச்சம்
  4. பெயரெச்சம்

விடை : இடைக்குறை

11. வெற்றம் என்பதன் பொருள் தருக

  1. பெருந்தவம்
  2. வட்டம்
  3. வெற்றி
  4. சோறு

விடை : வெற்றி

12. மடிவு என்பதன் பொருள் தருக

  1. வெற்றி
  2. சோம்பல்
  3. வட்டம்
  4. சோறு

விடை : சோம்பல்

பொருத்துக

  1. தெங்கு – தேங்காய்
  2. இசை – உச்சி
  3. வருக்கை – பலாப்பழம்
  4. நெற்றி – புகழ்

விடை : 1 – அ, 2 – ஈ, 3 – இ, 4 – ஆ

சிறு வினா

1. சீவக சிந்தாமணி குறிப்பு வரைக

  • ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று.
  • விருத்தப்பாவில் இயற்றப்பட்ட முதல் காப்பியம்,
  • மணநூல் என அழைக்கப்படுகிறது.
  • 13 இலம்பகங்களை கொண்டது.
  • இதனை இயற்றியவர் திருத்தக்க தேவர்

2. திருத்தக்கதேவர் குறிப்பு வரைக

  • சீவக சிந்தாமணியின் ஆசிரியர் திருத்தக்கதேவர்
  • சமண மதத்தை சார்ந்தவர்
  • இவர் கி.பி. 9-ம் நூற்றாண்டை சார்ந்தவர்
  • சீவக சிந்தாமணியை பாடுவதற்கு முன்பே நரிவிருத்தம் பாடியுள்ளார்.

Back to 9th Tamil Guide Home Page

Leave a Comment