Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.2 Olin Alaipu Book Back Solution

இயல் 8.2 – ஒளியின் அழைப்பு

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 9th Tamil Chapter 8.2 ‘Olin Alaipu’, you’ll find solutions to all the questions from the 9th Standard Tamil Book Lesson 8.2 ஒளியின் அழைப்பு

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 9th Tamil Chapter 8.2 Olin Alaipu Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 9th Tamil Guide PDF.

ஒளியின் அழைப்பு பாடல் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Olin Alaipu’ which is the first subject of class 9 Tamil. Additionally, you can also access additional questions related to the Olin Alaipu Subject.

Previous Lesson: பெரியாரின் சிந்தனைகள்

ஒளியின் அழைப்பு பாடல்

பிறவி இருளைத் துளைத்து
சூழலின் நிழலை வெறுத்து முகமுயர்த்தி
எப்படி விண்ணின்று வழியும் ஒளியமுதைத் தேடிப் போகிறது
ரவியின் கோடானுகோடி விரல்களின் அழைப்பிற்கு இணங்கி
எப்படி உடலை நெளித்து நீட்டி, வளைத்து வளருகிறது
எப்படி அமிருதத்தை நம்பி, ஒளியை வேண்டி
பெருமரத்துடன் சிறு கமுகு போட்டியிடுகிறது
அதுவே வாழ்க்கைப் போர்
முண்டி மோதும் துணிவே இன்பம்
உயிரின் முயற்சியே வாழ்வின் மலர்ச்சி.

– ந. பிச்சமூர்த்தி

நூல் வெளி

  • புதிய படைப்புச் சூழலில் மரபுக்கவிதையின் யாப்பு பிடியிலிருந்த விடுபட்ட கவிதைகள் புதுக்கவிதைகள் எனப்பட்டன.
  • பாரதியின் வசனக் கவிதையைத் தொடந்து புதுக்கவிதை படைக்கும் முயற்சியில் ந.பிச்சமூர்த்தி ஈடுபட்டார். எனவே அவர் புதுக்கவிதையின் தந்தை என போற்றப்பட்டார்.
  • புதுக்கவிதையைத் இலகு கவிதை, கட்டற்ற கவிதை, விலங்குகள் இலாக் கவிதை, கட்டுக்குள் அடங்காக் கவிதை என்று பல்வேறு பெயர்களில் குறிப்பிடுகின்றன.
  • ந.பிச்சமூர்த்தி தொடக்க காலத்தில் வழக்குரைஞராகவும், பின்னர் இந்து சமய அறநிலையப் பாதுகாப்புத்துறை அலுவலராகவும் பணியாற்றினார்.
  • ஹனுமான், நவ இந்தியா ஆகிய இதழ்களின் துணை ஆசிரியராக இருந்தார்
  • புதுக்கவிதை, சிறுகதை, ஓரங்க நாடகங்கள், கட்டுரைகள் ஆகியன இவர் படைத்த இலக்கிய வகைமைகள் ஆகும்
  • இவரின் முதல் சிறுகதை ஸயன்ஸூக்பலி என்பதாகும்
  • 1932-ல் கலைமகள் இதழ் வழங்கிய பரிசை பெற்றவர்
  • பிக்ஷூ, ரேவதி என்னும் புனைப்பெயரில் படைப்புகளை வெளியிட்டவர்.

சாெல்லும் பாெருளும்

  • விண் – வானம்
  • ரவி – கதிரவன்
  • கமுகு – பாக்கு

இலக்கணக் குறிப்பு

  • பிறவி இருள் – உருவகம்
  • ஒளியமுது – உருவகம்
  • வாழ்க்கைப்போர் – உருவகம்

பகுபத உறுப்பிலக்கணம்

1. வேண்டி – வேண்டு + இ

  • வேண்டு – பகுதி
  • இ – வினையெச்ச விகுதி

2. போகிறது – போ + கிறு + அ +து

  • போ – பகுதி
  • கிறு – நிகழ்கால இடைநிலை
  • அ – சாரியை
  • து – ஒன்றன்பால் வினைமுற்று விகுதி

3. மலர்ச்சி – மலர் + ச் + சி

  • மலர் – பகுதி
  • ச் – இடைநிலை
  • சி – தொழிற்பெயர் விகுதி

பலவுள் தெரிக

முண்டி மோதும் துணிவே இன்பம் – இவ்வடியில் இன்பமாக உருவகிக்கப்படுவது

  1. மகிழ்ச்சி
  2. வியப்பு
  3. துணிவு
  4. மருட்சி

விடை : துணிவு

குறு வினா

கமுகு மரம் எதனைத் தேடியது?

கமுகு மரம் விண்ணிலிருந்து வரும் கதிரவன் உயிர்ப்பைத் (அமுதை) தேடியது

சிறு வினா

அது வாழ்க்கைப் போர் – எது?

  • கமுகு மரம், தான் தோன்றிய இடத்தில் இருந்த பெருமரத்தின் நிழல் என்னும் இருளைத் துளைத்து நின்றது.
  • கமுகு மரம் விண்ணிலிருந்து வரும் கதிரவன் உயிர்ப்பைத் (அமுதை) தேடியது.
  • கமுகு மரம் பெருமரத்தின் நிழலை வெறுத்து, உச்சி கிளையை மேல் உயர்த்தி நின்றது.
  • அமுதத்தை நம்பி, ஒளியை வேண்டிக் கமுகு மரம் பெருமரத்துடன் போட்டி போடக் காரணம் ஆகும். இதுவே வாழ்க்கைப் போர்.

நெடு வினா

மொழியிலும், இலக்கியத்திலும் பெரியார் மேற்கொண்ட சீரமைப்புகளை விளக்குக

  • கமுகு மரம், தான் தோன்றிய இடத்தில் இருந்த பெருமரத்தின் நிழல் என்னும் இருளைத் துளைத்து நின்றது.
  • கமுகு மரம் விண்ணிலிருந்து வரும் கதிரவன் உயிர்ப்பைத் (அமுதை) தேடியது.
  • கமுகு மரம் பெருமரத்தின் நிழலை வெறுத்து, உச்சி கிளையை மேல் உயர்த்தி நின்றது.
  • அமுதத்தை நம்பி, ஒளியை வேண்டிக் கமுகு மரம் பெருமரத்துடன் போட்டி போடக் காரணம் ஆகும். இதுவே வாழ்க்கைப் போர்
  • கமுகு மரம் பெருமரத்துடன் முட்டி மோதி துணிச்சல், முயற்சி, நம்பிக்கைக் கொண்டு தன்முனைப்போடு கூடிய போட்டியில் போராணி வென்றது.
  • பெரு மரத்தை விஞ்சி வளர்ச்சி பெற்றி நடை போடுகிறது.
  • அதுபோலவே வாழ்க்கைப் போரில் செயல்பட்டால் வெற்றி பெறலாம் என்கின்ற வழியைக் கழுகமரம் வாயிலாக ஆசிரியர் உணர்த்துகிறார்.

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “பெரியாரின் சிந்தனைகள்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1. புதிய படைப்புச் சூழலில் மரபுக்கவிதையின் யாப்புப் பிடியிலிருந்து விடுபட்ட கவிதைகள் ____________ எனப்பட்டன.

  1. மரபுக் கவிதைகள்
  2. இலக்கணக் கவிதைகள்
  3. புதுக் கவிதைகள்
  4. உரைநடைக் கவிதைகள்

விடை: புதுக் கவிதைகள்

2. பாரதியாரின் வசன கவிதையைத் தொடர்ந்து புதுக்கவிதை படைக் கும் முயற்சியில் _____________ ஈடுபட்டார்.

  1. பாரதிதாசன்
  2. பாரதியார்
  3. வல்லிக்கண்ணன்
  4. ந,பிச்சமூர்த்தி

விடை : ந.பிச்சமூர்த்தி

3. புதுக்கவிதையின் தந்தை என்று போற்றப்படுபவர். 

  1. ந,பிச்சமூர்த்தி
  2. பாரதிதாசன்
  3. பாரதியார்
  4. வல்லிக்கண்ணன்

விடை : ந.பிச்சமூர்த்தி

4. ந. பிச்சமூர்த்தி தொடக்க காலத்தில் வழக்குரைஞராகவும் பின்னர் ____________ அலுவலராகவும் பணியாற்றினார்.

  1. இந்து சமய அறநிலையப் பாதுகாப்புத் துறை
  2. பாதுகாப்பு துறை
  3. தேர்வாணைய
  4. மக்கள் நல

விடை : இந்து சமய அறநிலையப் பாதுகாப்புத் துறை

5. பிக்ஷூ, ரேவதி என்னும் புனைப்பெயரில் படைப்புகளை வெளியிட்டவர் 

  1. வல்லிக்கண்ணன்
  2. ந,பிச்சமூர்த்தி
  3. பாரதிதாசன்
  4. பாரதியார்

விடை : ந,பிச்சமூர்த்தி

3. ஹனுமான், நவஇந்தியா ஆகிய இதழ்களில் துணையாசிரியராக இருந்தவர்

  1. வல்லிக்கண்ணன்
  2. பாரதிதாசன்
  3. பாரதியார்
  4. ந,பிச்சமூர்த்தி

விடை : ந,பிச்சமூர்த்தி

7. முண்டி மோதும் துணிவே ____________

  1. வாழ்க்கைப்போர்
  2. நம்பிக்கை
  3. துணை
  4. இன்பம்

விடை : இன்பம்டிட்ட இடங்களை நிரப்புக.

குறு வினா

1. புதுக்கவிதைகள் என்பது என்ன?

புதிய படைப்புச் சூழலில் மரபுக்கவிதையின் யாப்பு பிடியிலிருந்த விடுபட்ட கவிதைகள் புதுக்கவிதைகள் எனப்பட்டன.

2. ந.பிச்சமூர்த்தி புதுக்கவிதைகளின் தந்தையாக கருதப்படக் காரணம் யாது?

பாரதியின் வசனக் கவிதையைத் தொடந்து புதுக்கவிதை படைக்கும் முயற்சியில் ந.பிச்சமூர்த்தி ஈடுபட்டார். எனவே அவர் புதுக்கவிதையின் தந்தை என போற்றப்பட்டார்.

3. ஹனுமான், நவ இந்தியா இதழ்களின் துணை ஆசிரியராக பணியாற்றியவர்?

ந.பிச்சமூர்த்தி

4. ந.பிச்சமூர்த்தியின் கவிதைகள் பற்றி வல்லிக்கண்ணனின் கருத்து யாது?

இயற்கையும், வாழ்க்கை அனுபவங்களையும் இணைத்து, அறிவுத் தெளிவுடன் நல்வாழ்க்கைக்கான தத்துவ உண்மைகளைக் காணும் முயற்சிகளே பிச்சமூரத்தியின் கவிதைகள் என்று வல்லிக்கண்ணன் குறிப்பிடுகிறார்.

சிறு வினா

ந.பிச்சமூர்த்தி சிறு குறிப்பு வரைக

  • சிறப்பு: புதுக்கவிதையின் தந்தை
  • பணி : வழக்குரைஞர், இந்து சமய அறநிலையப் பாதுகாப்புத்துறை அலுவலர்
  • பத்திரிக்கை துணை ஆசிரியர்: ஹனுமான், நவ இந்தியா
  • இலக்கிய வகைகள்: புதுக்கவிதை, சிறுகதை, ஓரங்க நாடகங்கள், கட்டுரைகள்
  • முதல் சிறுகதை: ஸயன்ஸூக்பலி
  • பரிசு: 1932-ல் கலைமகள் இதழ் வழங்கியது
  • புனைப்பெயர்: பிக்ஷூ, ரேவதி

Back to 9th Tamil Guide Home Page

Leave a Comment