Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.5 Punarchi Book Back Solution

இயல் 6.5 – புணர்ச்சி

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 9th Tamil Chapter 6.5 ‘Punarchi’, you’ll find solutions to all the questions from the 9th Standard Tamil Book Lesson 6.5 புணர்ச்சி

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 9th Tamil Chapter 6.5 Punarchi Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 9th Tamil Guide PDF.

புணர்ச்சி வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Punarchi’ which is the first subject of class 9 Tamil. Additionally, you can also access additional questions related to the Punarchi Subject.

Previous Lesson: செய்தி

பலவுள் தெரிக

மரவேர் என்பது ________ புணர்ச்சி

 1. இயல்பு
 2. திரிதல்
 3. தோன்றல்
 4. கெடுதல்

விடை : கெடுதல்

சிறு வினா

கைபிடி, கைப்பிடி சொற்களின் பொருள் வேறுபாடுகளையும் ஆவற்றின் புணர்ச்சி வகைகளையும் எழுதுக.

கைபிடி:-

 • பொருள் : கையினை பிடி
 • புணர்ச்சி வகை : இயல்புப்புணர்ச்சி

கைப்பிடி:-

 • பொருள் : கைப்பிடி பிடி
 • புணர்ச்சி வகை : விகாரப்புணர்ச்சி

கற்பவை கற்றபின்

எழுத்துவகை அறிந்து பொருத்துக.

 1. இயல் –  அ. உயிர் முதல் உயிரீறு
 2. புதிது –  ஆ. உயிர் முதல் மெய்யீறு
 3. ஆணி –  இ. மெய்ம்முதல் மெய்யீறு
 4. வரம் –  ஈ. மெய்ம்முதல் உயிரீறு

விடை : 1 – ஆ, 2 – ஈ, 3 – அ, 4 – இ

புணர்ச்சிகளை ’முதல், ஈற்றுச்’ சொல்வகையால் பொருத்துக

 1. செல்வி + ஆடினாள் – அ. மெய்யீறு + மெய்ம்முதல்
 2. பாலை + திணை – ஆ. மெய்யீறு + உயிர்முதல்
 3. கோல் + ஆட்டம் – இ. உயிரீறு + உயிர்முதல்
 4. மண் + சரிந்தது – ஈ. உயிரீறு + மெய்ம்முதல்

விடை : 1 – இ, 2 – ஈ, 3 – ஆ, 4 – அ

சேர்த்து எழுதுக.

 1. தமிழ் + பேசு = தமிழ்பேசு
 2. தமிழ் + பேச்சு = தமிழ்பேச்சு
 3. கை + கள் = கைகள்
 4. பூ + கள் = பூக்கள்

பொருத்தமான உடம்படுமெய்யுடன் இணைக்க

1. பூ + இனம் = பூவினம்

விடை: வகர உடம்படு மெய்

2. இசை + இனிக்கிறது = இசையினிக்கிறது

விடை: யகர உடம்படுமெய்

3. திரு + அருட்பா = திருவருட்பா

விடை: வகர உடம்படு மெய்

4. சே + அடி = சேவடி

விடை: வகர உடம்படு மெய்

சிந்தனை வினாக்கள்

அ) குற்றியலுகரம், முற்றியலுகரம் இவற்றின் வேறுபாட்டை எழுதுக.

 • குற்றியலுகரத்தில் வரும் “உ”கரமானது தனக்குரிய ஒரு மாத்திரையில் இருந்து அரை மாத்திரையாக குறுகி ஒலிக்கும்.
 • முற்றியலுகரத்தில் வரும் “உ”கரமானது தனக்குரிய ஒரு மாத்திரை அளவில் இருந்து குறையாமல் ஒலிக்கும்.

ஆ) புணர்ச்சி இலக்கணம் கற்பது உரைநடை எழுதவதற்கு உதவும் – இக்கூற்றை ஆய்க.

ஒரு சொல்லை பிரித்தால் வரும் நிலைமொழி + வருமொழி – எவ்வாறு புணரும் என்பதை அறியும் பொழுதுதான் உரைநடை எழுதும்போது ஏற்படும். ஒலிநிலை மாற்றங்களை உணர்ந்து எழுத இயலும்.

வல்லினம் மிகும் மற்றும் மிகாவிடங்கள், சொறசேர்க்கை ஆகியன உரைநடைக்கு இன்றியமையாதாகும். அவற்றை தெளிவாக தருவது புணர்ச்சி இலக்கணம்.

எனவே புணர்ச்சி இலக்கணம் கற்பது உரைநடை எழுத உதவும்.

இ) கீழ்க்காணும் பத்தியில் உள்ள சொற்களைச் சேர்த்து எழுதுக.

தமிழின் ’தொன்மை + ஆன’ இலக்கண ’நூல் + ஆகிய’ ’தொ ல்காப்பியம் + இல்’ ’சிற்பம் + கலை’ பற்றிய குறிப்புக் காணப்படுகிறது. போரில் விழுப்புண்பட்டு இறந்த வீரருக்கு நடுகல் நடப்படும். ’அ + கல் லில்’ அவ்வீரரின் உருவம் பொறிக்கப்பெறும். ’தமிழக + சிற்பம் + கலை’யின் தோற்றத்திற்கான சான்றாக ’இதனை + கொள்ளலாம்’. சிலப்பதிகாரத் தில் ’கண்ணகிக்கு + சிலை’ வடித்த செய்தி இடம் பெற்றுள்ளது. மாளிகைகளில் பல ’சுதை + சிற்பங்கள்’ இருந்ததை மணிமேகலை மூலம் ’அறிய + முடிகிறது’.

 • தொன்மை + ஆன = தொன்மையான
 • நூல் + ஆகிய = நூலாகிய
 • தொல்காப்பியம் + இல் = தொல்காப்பியத்தில்
 • சிற்பம் + கலை = சிற்பக்கலை
 • அ + கல்லில் = அக்கல்லில்
 • தமிழக + சிற்பம் + கலை = தமிழகச் சிற்பக்கலை
 • இதனை + கொள்ளலாம் = இதனைக் கொள்ளலாம்
 • கண்ணகிக்கு + சிலை = கண்ணகிக்குச் சிலை
 • சுதை + சிற்பங்கள் = சுதைச் சிற்பங்கள்
 • அறிய + முடிகிறது = அறிய முடிகிறது

படக்காட்சியிலிருந்து இருசொல் தொடர்களை அமைத்து, அவற்றின் புணர்ச்சி வகையினைக் கண்டறிக

1. மரக்கிளை = மரக்கிளை

விடை: விகாரப் புணர்ச்சி

2. மூன்றுபெண்கள் = மூன்றுபெண்கள்

விடை: இயல்புப் புணர்ச்சி

3. நிறைகுடம் = நிறைகுடம்

விடை: இயல்புப் புணர்ச்சி

4. உழவுத்தொழில் = உழவுத்தொழில்

விடை: தோன்றல் விகாரப் புணர்ச்சி

மொழியை ஆள்வோம்

மொழிபெயர்க்க

1. Strengthen the body

விடை: உடலினை உறுதி செய்

2. Love your Food

விடை: உணவை நேசி

3. Thinking is great

விடை: நல்லதே நினை

4. Walk like a bull

விடை: ஏறு போல் நட

5. Union is Strength

விடை: ஒற்றுமையே பலம்

6. Practice what you have learnt

விடை: படித்ததைப் பழகிக் கொள்

மரபுத் தொடர்களைக் கொண்டு தொடர் அமைக்க

எட்டாக்கனி உடும்புப்பிடி
கிணற்றுத்தவளை ஆகாயத் தாமரை
எடுப்பார் கைப்பிள்ளை மேளதாளத்துடன்

1. எட்டாக்கனி

விடை: முயன்றால் எந்தச் செயலிலும் வெற்றி என்பது எட்டாக்கனி இல்லை.

2. உடும்புப்பிடி 

விடை: நட்பில் அன்பு உடும்புப்பிடி போன்றது

3. கிணற்றுத்தவளை 

விடை: வெறும் படிப்பறிவு மட்டும் இருப்பது கிணற்றுத்தவளை போலத்தான்.

4. ஆகாயத்தாமரை

விடை: பாலைவனத்தில் நீர் கிடைப்பது ஆகாயத்தாமரை பூப்பது போலத்தான்

5. எடுப்பார் கைப்பிள்ளை

விடை: பிறரின் பேச்சைக் கேட்டு எடுப்பார் கைப்பிள்ளை போல இருக்கக் கூடாது.

6. மேளதாளத்துடன்

விடை: நண்பனின் திருமணம் மேளதாளத்துடன் நடைபெற்றது.

பத்தியில் இடம்பெற்றுள்ள இயல்பு புணர்ச்சிகளையும் விகாரப் புணர்ச்சிகளையும் எடுத்தெழுதுக

காஞ்சி கயிலாசநாதர் கோவில் சுற்றுச்சுவர் முழுவதும் சிற்பங்களின் கலைக்கூடமாகத் திகழ்கிறது. அதேபோன்று காஞ்சி வைகுந்தபெருமாள் கோவிலிலும் பல்லவர்காலச்சிற்பங்கள் மிகுதியாக உள்ளன. இங்குத் தெய்வச் சிற்பங்கள் மட்டுமல்லாது பிற சிற்பங்களும் கோவில் உட்புறச் சுவரில் செதுக்கப்பட்டுள்ளன. பல்லவர்காலக் குடைவரைக் கோவில்களின் நுழைவுவாயிலின் இருபுறங்களிலும் காவலர்கள் நிற்பதுபோன்று சிற்பங்கள் படைக்கப்பட்டுள்ளன.

1. நுழைவு + வாயிலின் = நுழைவு வாயிலின்

விடை: இயல்புப் புணர்ச்சி

2. நிற்பது + போன்று = நிற்பது போன்று

விடை: இயல்புப் புணர்ச்சி

3. சுற்று + சுவர் = சுற்றுச்சுவர்

விடை: தோன்றல் விகாரப் புணர்ச்சி

4. கலை + கூடம் = கலைக்கூடம்

விடை: தோன்றல் விகாரப் புணர்ச்சி

5. தெய்வம் + சிற்பங்கள் = தெய்வச் சிற்பங்கள்

விடை: தோன்றல் விகாரப்புணர்ச்சி

6. குடவரை + கோயில் = குடவரைக் கோயில்

விடை: தோன்றல் விகாரப்புணர்ச்சி

7. வைகுந்தம் + பெருமாள் = வைகுந்த பெருமாள்

விடை: கெடுதல் விகாரப்புணர்ச்சி

8. பல்லவர் காலம் + குடவரைக் கோயில் = பல்லவர் காலக் குடவரைக் கோயில்

விடை: திரிதல் விகாரப்புணர்ச்சி

மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக

1. இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை போட்டனர்.

விடை: இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை வேய்ந்தனர்.

2. கயல் பானை செய்யக் கற்றுக் கொண்டான்.

விடை: கயல் பானை வனையக் கற்றுக் கொண்டாள்

3. நேற்று தென்றல் காற்று அடித்தது.

விடை: நேற்று தென்றல் காற்று வீசியது.

4. தென்னை மட்டையிலிருந்து நார் எடுத்தார்.

விடை: தென்னை மட்டையிலிருந்து நார் உரித்தனர்.

5. அணில் பழம் சாப்பிட்டது.

விடை: அணில் பழம் கொறித்தது.

6. கொடியிலுள்ள மலரை எடுத்து வா .

விடை: கொடியிலுள்ள மலரைப் பறித்து வா .

மொழியோடு விளையாடு

விடையைத் தமிழ் எண்களில் எழுதுக

1. பதினெண் கீழ்கணக்கு 

விடை: ௧௮

2. திருக்குறளின் அதிகாரங்கள் 

விடை: ௧௩௩

3. சிற்றிலக்கியங்கள்

விடை: ௯௩

4. சைவத் திருமுறைகள் 

விடை: ௧௨

5. நாயன்மார்கள்

விடை: சா௩

6. ஆழ்வார்கள் 

விடை: ௧௨

கண்டுபிடிக்க

1. எண்ணும் எழுத்தும் கண் – இந்தத் தொடரை ஒருவர் 1 2 3 4 1 5 6 7 4 8 2 என்று குறிப்பிடுகிறார். இதே முறையைப் பின்பற்றிக் கீழ்க் காணும் சொற்களை எப்படிக் குறிப்பிடுவார்?

 1. எழுது → 1, 5, 7
 2. கண்ணும் → 8, 2, 3, 4
 3. கழுத்து → 8, 5, 6, 7
 4. கத்து → 8, 6, 7

2. என் வகுப்பில் படிக்கும் அனைவரும் புதிய புத்தகம் வைத்திருந்தனர். இராமனும் புதிய புத்தகம் வைத்திருந்தான். எனவே, இராமன் என் வகுப்பு மாணவன் – இக்கூற்று

 1. உண்மை
 2. பொய்
 3. உறுதியாகக் கூறமுடியாது

விடை: உறுதியாகக் கூறமுடியாது

காரணம்: அனைவரும் என்று, கூறிய பின் இராமன் வேறு வகுப்பு மாணவனாகக் கூட இருக்கலாம்.

அகராதியில் காண்க

1. ஏங்கல்

விடை: அஞ்சல். அழுதல், இரங்கல், வாடல், வாய்விடல், கவலைப்படல்

2. கிடுகு

விடை: வட்டவடிவப்பாறை, கேடகம், சட்டப்பலகை, தேரின் மரச்சுற்று, முடைந்த ஓலைக்கீற்று

3. தாமம்

விடை: மாலை, இடம், உடல், ஒளி, பிறப்பு, பெருமை, யானை

4. பான்மை

விடை: குணம், தகுதி, தன்மை, பங்கு, ஊழ், நல்வினைப்பயன்

5. பொறி

விடை: அறிவு, எழுத்து, செல்வம், தீப்பொறி, தேர், வண்டு, முத்திரை, வரி, பதுமை

உவமைத் தொடர்களை உருவகத் தொடர்களாக மாற்றுக.

1. மலர்விழி வீணை வாசித்தாள்; கேட்டவர் வெள்ளம் போன்ற இன்பத்தில் நீந்தினர்.

விடை: விழிமலர் வீணை வாசித்தாள், கேட்டவர் இன்ப வெள்ளத்தில் நீந்தினர்

2. குழலியின் இசையைச் சுவைத்தவர், கடல் போன்ற கவலையிலிருந்து நீங்கினர்.

விடை: குழலியின் இசையைச் சுவைத்தவர் கவலை கடலிருந்து நீங்கினர்

3. தேன் போன்ற மொழியைப் பவளவாய் திறந்து படித்தாள்.

விடை: மொழித்தேனை வாய்பவளத்தால் திறந்து படித்தாள்

4. முத்துநகை தன் வில் போன்ற புருவத்தில் மை தீட்டினாள்.

விடை: நகைமுத்து தன் புருவவில்லில் மை தீட்டினாள்

நிற்க அதற்குத் தக

கலைச்சொல் அறிவோம்

 • குடைவரைக் கோவில் – Cave temple
 • கருவூலம் – Treasury
 • மதிப்புறு முனைவர் – Honorary Doctorate
 • மெல்லிசை – Melody
 • ஆவணக் குறும்படம் – Document short film
 • புணர்ச்சி – Combination

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “புணர்ச்சி” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பொருத்துக

 1. கலை + அழகு – மெய்ம்முதல்
 2. மண் + குடம் – உயிர்முதல்
 3. வாழை + இலை – மெய்யீறு
 4. வாழை + மரம்  – உயிரீறு

விடை: 1 – ஈ, 2 – இ, 3 – ஆ, 4 – அ

பொருத்துக

 1. உயிர்முன் உயிர் – மரக்கிளை
 2. உயிர்முன் மெய் – மணியடி
 3. மெய்ம்முன் உயிர் – பனிக்காற்று
 4. மெய்ம்முன் மெய் – ஆலிலை

விடை: 1 – ஆ, 2 – இ, 3 – ஈ, 4 – அ

சிறு வினா

1. புணர்ச்சியின் எத்தனை வகைப்படும்? அதன் வகைகளை கூறுக

புணர்ச்சி இரு வகைப்படும்.

 1. இயல்பு புணர்ச்சி
 2. விகாரப்புணர்ச்சி

2. இயல்பு புணர்ச்சி என்பது யாது?

நிலைமொழி இறுதியும், வருமொழி முதலும் எவ்வித வேறுபாடும் இன்றி சேர்வது விகாரப்புணர்ச்சி ஆகும்

 • மா + மரம் = மாமரம்

3. விகாரப்புணர்ச்சி என்பது யாது?

நிலைமொழி இறுதியும், வருமொழி முதலும் மாறுபட்டு சேர்வது விகாரப்புணர்ச்சி ஆகும்

 • நுழைவு + தேர்வு = நுழைவுத்தேர்வு

4. விகாரப்புணர்ச்சி எத்தனை வகைப்படும்? அதன் வகைகளை கூறு

விகாரப்புணர்ச்சி மூன்று வகைப்படும்.

 1. தோன்றல்
 2. திரிதல்
 3. கெடுதல்

5. குற்றியலுகர வகையினை எழுதுக.

 • வன்தொடர்க் குற்றியலுகரம்
 • மென்தொடர்க் குற்றியலுகரம்
 • இடைத்தொடர்க் குற்றியலுகரம்
 • உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
 • ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்
 • நெடில் தொடர்க் குற்றியலுகரம்

6. மெல்லினம் மிகும் விதிகளை எழுதுக

 • ’ய’கர ஈற்றுச் சொற்கள் முன் மெல்லினம் மிகும்
 • வேற்றுநிலை மெய்ம்மயக்கத் தில் ய,ர,ழ முன்னர் மெல்லினம் மிகும்.
 • ’புளி’ என்னும் சுவைப் பெயர் முன்னர் வல்லெழுத்து மட்டுமன்றி மெல்லினமும் மிகும்.
 • உயிரெழுத்தை இறுதியில் கொண்ட மரப் பெயர்களுக்கு முன்னர் மெல்லினம் மிகும்.
 • ’பூ’ என்னும் பெயர் முன்னர் வல்லினத்தோடு மெல்லினமும் மிகும்.

Back to 9th Tamil Guide Home Page

Leave a Comment