Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.4 Seithi Book Back Solution

இயல் 6.4 – செய்தி

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 9th Tamil Chapter 6.4 ‘Seithi’, you’ll find solutions to all the questions from the 9th Standard Tamil Book Lesson 6.4 செய்தி

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 9th Tamil Chapter 6.4 Seithi Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 9th Tamil Guide PDF.

செய்தி பாடல் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Seithi’ which is the first subject of class 9 Tamil. Additionally, you can also access additional questions related to the Seithi Subject.

Previous Lesson: நாச்சியார் திருமொழி

நெடு வினா

இசைக்கு நாடு, மொழி இனம் தேவையில்லை என்பதைச் செய்திக் கதையின் விளக்குக

முன்னுரை:-

செய்தி என்னும் சிறுகதையின் ஆசிரியனர் தி.ஜானகிராமன். இக்கதை “சிவப்பு ரிக்சா என்ற சிறுகதை தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. இசைக்கு நாடு, மொழி, இனம் தேவையில்லாமல் என்பதை இக்கதையில் காண்போம்.

வித்துவான்:-

இசைக்கு மயங்காத உயிர்கள் இல்லை. அத்தகைய இசைக்கு காரணம் இசைக் கருவிகள் தமிழக இசையில் தன் முத்திரை பதித்தது நாதஸ்வரம். இதில் பல இராகங்களை கொண்டு வித்துவான் வாசித்தார். அத நிகழ்ச்சியில் பிலிப் போல்ஸ்கா என்ற வித்துவானும் வந்திருந்தார்.

இசை மயக்கம்:-

நாதஸ்வரக் கலைஞர் வாசிக்கத் தொடங்கினார். நாதஸ்வர இசை இனிக்க ஆரம்பித்தது. போஸ்கோ சிரித்தபடியே தன்னையே இழந்து இரசிக்கின்றார். இசை வெள்ளத்தில் மிதக்கின்றார். வெளிநாட்டவர் தமிழக இசைக்கு மெய் மறக்கின்றனர். வித்துவானின் சாமாராகம் அனைவரையும் மயங்கச் செய்தது. ஆடவும் செய்தது.

செய்தி:-

வித்வானிடம் சாந்தமுலேகாவை 5, 6 முறை வாசிக்கக் கேட்டு மகிழ்ந்தார். இதில் ஒரு செய்தி இருப்பதாகவும். ஏதோ ஒரு உலகத்தில் இருந்து வந்த செய்தி கேட்கிறது. நான் அதில் மூழ்கி விட்டேன் என்றார் போஸ்கா. எனக்கு அனுப்பிய செய்தி, உலகத்திற்கே அனுப்பிய செய்தி, அது தமிழ் இசையின் செய்தி. வேறு எந்த சங்கீதமும் இதனை கொடுக்கவும் இல்லை. அதனை நான் வாங்கிக் கொண்டேன்.

முடிவுரை:-

போஸ்கோவின் செயல்பாடுகள் இசைக்கு நாடு, மொழி, மதம் என எதுவும் இல்லை என்பதை உணர்த்துகிறது.

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “செய்தி” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1. தி.ஜானகிராமன் தனது ஜப்பான் பயண அனுபவங்களை உதயசூரியன் என்ற தலைப்பில் ___________ வார இதழில் எழுதினார்.

  1. சுதேசமித்திரன்
  2. குமுதம்
  3. அவள் விகடன்
  4. ஆனந்த விகடன்

விடை: சுதேசமித்திரன்

2. ரோம், செக்கோஸ்லோவோக்கியா சென்ற அனுபவங்களைக் கருங்கடலும் கலைக்கடலும் என்னும் தலைப்பில் ___________இல் நூலாக வெளியிட்டார்.

  1. 1973
  2. 1974
  3. 1975
  4. 1976

விடை: 1974

3. தி. ஜானகிராமன் _____________ மண்வாசனையுடன் கதைகளைப் படைத்தவர்.

  1. கோவில்பட்டி
  2. காஞ்சிபுரம்
  3. நெல்லை
  4. தஞ்சை

விடை: தஞ்சை

4. அவரவர் அனுபவிப்பதும் எழுத்தாக வடிப்பதும் அவரவர் முறை என்னும் கோட்பாட்டைக் கொண்டவர்

  1.  கு. அழகிரிசாமி
  2. தி. ஜானகிராமன்
  3. ஆதவன்
  4. அசோகமித்ரன்

விடை: தி. ஜானகிராமன்

5. ______________ என்னும் சிறுகதை சிவப்பு ரிக்ஷா என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

  1. தகவல்
  2. இசை
  3. செய்தி
  4. அன்பு

விடை: செய்தி

6. பழைய வீடுகளிலிருந்து பிரிக்கப்பட்ட ஆச்சா மரக்கட்டைகளைக் கொண்டு கருவி செய்யப்படுகிறது.

  1. மத்தளம்
  2. வீணை
  3. நாகசுரம்
  4. பறை

விடை: நாகசுரம்

7. சீவாளி நாணல் என்ற ___________ வகையைக்கொண்டு செய்யப்படுகிறத

  1. மர
  2. தாவர
  3. புல்
  4. விலங்கு

விடை: புல்

குறு வினா

1. தஞ்சாவூர், தமிழுக்கு அளித்த கொடையாளர்கள் யாவர்?

உ.வே. சாமிநாதர், தி.ஜானிகிராமன், மெளனி, தஞ்சை இராமையா தாஸ், தஞ்சை பிரகாஷ், தஞ்சாவூர் கவிராயர்

2. பாடப்பகுதியில் குறிப்பிடப்படும் தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்களும் சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டுகளையும் எழுதுக

  • 1970 – அன்பளிப்பு (சிறுகதைகள்) – கு. அழகிரிசாமி
  • 1979 – சக்தி வைத்தியம் (சிறுகதைத் தொகுப்பு) – தி. ஜானகிராமன்
  • 1987 – முதலில் இரவு வரும் (சிறுகதைத் தொகுப்பு) – ஆதவன்
  • 1996 -அப்பாவின் சிநேகிதர் (சிறுகதைத் தொகுப்பு) – அசோகமித்ரன்
  • 2008 – மின்சாரப்பூ (சிறுகதைகள்) – மேலாண்மை பொன்னுசாமி
  • 2010 – சூடிய பூ சூடற்க (சிறுகதைகள்) – நாஞ்சில் நாடன்
  • 2016 – ஒரு சிறு இசை (சிறுகதைகள்) – வண்ணதாசன்

Back to 9th Tamil Guide Home Page

Leave a Comment