Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.4 Yasodhara Kaviyam Book Back Solution

இயல் 8.4 – யசோதர காவியம்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 9th Tamil Chapter 8.4 ‘Yasodhara Kaviyam’, you’ll find solutions to all the questions from the 9th Standard Tamil Book Lesson 8.4 யசோதர காவியம்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 9th Tamil Chapter 8.4 Yasodhara Kaviyam Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 9th Tamil Guide PDF.

யசோதர காவியம் பாடல் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Yasodhara Kaviyam’ which is the first subject of class 9 Tamil. Additionally, you can also access additional questions related to the Yasodhara Kaviyam Subject.

Previous Lesson: தாவோ தே ஜிங்

யசோதர காவியம் பாடல்

ஆக்குவது ஏதெனில் அறத்தை ஆக்குக
போக்குவது ஏதெனில் வெகுளி போக்குக
நோக்குவது ஏதெனில் ஞானம் நோக்குக
காக்குவது ஏதெனில் விரதம் காக்கவே.

நூல் வெளி

  • யசோதர காவியம் ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று.
  • வட மொழியிலிருந்து தமிழில் தழுவி எழுதப்பெற்ற நூல்.
  • இதன் ஆசிரியர் அறிய முடியவில்லை.
  • இது சமண முனிவர் ஒருவரால் இயற்றப்பட்டது என்பர்.
  • யசோதரன் என்னும் அவந்தி நாட்டு மன்னனின் வரலாற்றை கூறுகிறது.
  • இந்நூல் ஐந்து சருக்கங்களைக் கொண்டது.
  • பாடல்களின் எண்ணிக்கை 320 எனவும் 330 எனவும் கருதுவர்.

சாெல்லும் பாெருளும்

  • அறம் – நற்செயல்
  • வெகுளி – சினம்
  • ஞானம் – அறிவு
  • விரதம் – மேற்கொண்ட நன்னெறி

இலக்கணக் குறிப்பு

  • ஆக்குக, போக்குக, நோக்குக, காக்க – வியங்கோள் வினைமுற்றுகள்

பகுபத உறுப்பிலக்கணம்

காக்க – கா + க் +க

  • கா – பகுதி
  • க் – சந்தி
  • க – வியங்கோள் வினைமுற்று விகுதி

பலவுள் தெரிக

ஞானம் என்பதன் பொருள் யாது?

  1. தானம்
  2. தெளிவு
  3. சினம்
  4. அறிவு

விடை : அறிவு

குறு வினா

யசோதர காவியத்தின் பாட்டுடைத் தலைவன் யார்?

யசோதர காவியத்தின் பாட்டுடைத் தலைவன்  அவந்தி நாட்டு மன்னன் யசோதரன்

சிறு வினா

1. நாம் கடை பிடிக்க வேண்டிய வாழ்க்கை நெறிகளாக யசோதர காவியம் குறிப்பிடுவன யாவை?

  • நாம் ஒரு செயலைச் செய்வதென்றால் அச்செயல் பயன்தரத்தக்க நற்செயலாக இருத்தல் வேண்டும்.
  • நம்மிடம் உள்ள தீய பண்புகளை நீக்க வேண்டுமாயின் முதலில் சினத்தை நீக்க வேண்டும்.
  • ஆராய வேண்டுமானல் மெய்யறிவு நூல்களை ஆராய வேண்டும்.
  • இடை விடாது போற்றிக் காக்க வேண்டுமென்றால் நன்னெறியினைக் காக்க வேண்டும்.

2. யசோதர காவியம் வெளிப்படுத்தும் வாழ்க்கை நெயியைத் திருக்குறளுடன் ஒப்பிடுக

திருக்குறள்:-

“ஒல்லும் வகையால் அறவினை யோவதே
செல்லும்வா யெல்லாஞ் சிறப்பு”

யசோதர காவியம்:-

நம்மிடம் உள்ள தீய பண்புகளை நீக்க வேண்டுமாயின் முதலில் சினத்தை நீக்க வேண்டும்.

திருக்குறள்:-

“ஒல்லும் வகையால் அறவினை யோவதே
பிறத்தல் அதனான் வரும்”

யசோதர காவியம்:-

ஆராய வேண்டுமானால் மெய்யறிவு நூல்களை ஆராய வேண்டும்

திருக்குறள்:-

“எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
செல்லும்வா யெல்லாஞ் சிறப்பு”

யசோதர காவியம்:-

இடைவிடாது போற்றிக் காக்க வேண்டுமென்றால் நன்னெறியினைகள் காக்க வேண்டும்.

3. பிறமொழி இலக்கியங்களைத் தழுவி எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்களை குறிப்பிடுக?

  • சூளாமணி
  • புரட்சிக்காப்பியம்
  • பெருங்கதை
  • இரட்சண்ய யாத்ரிகம்
  • மனோன்மணீயம்
  • கம்பராமாயணம்

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “யசோதர காவியம்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1.  ஐஞ்சிறுகாப்பியங்களுள் ஒன்று

  1. சிலப்பதிகாரம்
  2. யசோதர காவியம்
  3. மணிமேகலை
  4. வளையாபதி

விடை: யசோதர காவியம்

2. யசோதரதன் ______________ காவியத்தின் பாட்டுடைத் தலைவன்

  1. நாக குமார காவியம்
  2. உதய குமார காவியம்
  3. யசோதர காவியம்
  4. நீலகேசி

விடை: யசோதர காவியம்

3. வட மொழியிலிருந்து தமிழில் தழுவி எழுதப்பெற்ற நூல் __________

  1. யசோதர காவியம்
  2. திருக்குறள்
  3. சிலப்பதிகாரம்
  4. மணிமேகலை

விடை : யசோதர காவியம்

4. யசோதர காவியம் __________ என்ற மன்னனின் வரலாற்றை கூறுகிறது.

  1. அவந்தி நாட்டு
  2. மகத நாட்டு
  3. கலிங்க நாட்டு
  4. பாரத நாட்டு

விடை : கலிங்க நாட்டு

5. யசோதர காவியம் _________ சருக்கங்களை கொண்டது

  1. 20
  2. 15
  3. 10
  4. 5

விடை : 5

6. யசோதர காவியத்தின்  பாடல்கள் எண்ணிக்கை __________ எனவும் __________ எனவும் கருதுவர்

  1. 330, 340
  2. 320, 360
  3. 320, 340
  4. 320, 330 

விடை : 320, 330

6. ஆக்குக – இலக்கணக்குறிப்பு தருக

  1. வினைத்தொகை
  2. பண்புத்தொகை
  3. வியங்கோள் வினைமுற்று
  4. உவமைத் தொகை

விடை : வியங்கோள் வினைமுற்று

குறு வினா

1. நம்மிடம் உள்ள தீய பண்புகளை நீக்க வேண்டுமாயின் முதலில் எதனை நீக்க வேண்டும்?

நம்மிடம் உள்ள தீய பண்புகளை நீக்க வேண்டுமாயின் முதலில் சினத்தை நீக்க வேண்டும்.

2. ஆராய வேண்டுமானல் எதனை ஆராய வேண்டும்?

ஆராய வேண்டுமானல் மெய்யறிவு நூல்களை ஆராய வேண்டும்.

3. இடை விடாது போற்றிக் காக்க வேண்டுவது யாது?

நன்னெறி

4. யசோதர காவியம் குறிப்பு வரைக

  • யசோதர காவியம் ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று.
  • வட மொழியிலிருந்து தமிழில் தழுவி எழுதப்பெற்ற நூல்.
  • இதன் ஆசிரியர் அறிய முடியவில்லை.
  • இது சமண முனிவர் ஒருவரால் இயற்றப்பட்டது என்பர்.
  • யசோதரன் என்னும் அவந்தி நாட்டு மன்னனின் வரலாற்றை கூறுகிறது.
  • இந்நூல் ஐந்து சருக்கங்களைக் கொண்டது.
  • பாடல்களின் எண்ணிக்கை 320 எனவும் 330 எனவும் கருதுவர்.

Back to 9th Tamil Guide Home Page

Leave a Comment